பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிவாசி மக்களின் "எம்ப்ராய்டரி' வேலைப்பாட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம்

Updated : ஜூன் 14, 2013 | Added : ஜூன் 13, 2013 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வாழும், தோடர் இன ஆதிவாசி மக்களின், பாரம்பரிய தொழிலான எம்ப்ராய்டரி (பூ வேலைப்பாடு) தொழிலுக்கு, "புவியியல் குறியீடு' வழங்கப்பட்டுள்ளதன் மூலம், உலகளாவிய பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.பாரம்பரியம்: நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், காட்டு நாயக்கர் என, பலவகை பழங்குடி, ஆதிவாசி இன மக்கள் வசிக்கின்றனர். நீலகிரியின்,
Geographical identity for Adivasi Emproidary

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வாழும், தோடர் இன ஆதிவாசி மக்களின், பாரம்பரிய தொழிலான எம்ப்ராய்டரி (பூ வேலைப்பாடு) தொழிலுக்கு, "புவியியல் குறியீடு' வழங்கப்பட்டுள்ளதன் மூலம், உலகளாவிய பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.


பாரம்பரியம்:

நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், காட்டு நாயக்கர் என, பலவகை பழங்குடி, ஆதிவாசி இன மக்கள் வசிக்கின்றனர். நீலகிரியின், "மண்ணின் மைந்தர்கள்' என்ற பெருமையை பெற்ற, இவர்களின் பாரம்பரியம், பல நூறு ஆண்டுகளை கடந்தது. இவர்கள் அணியும் பாரம்பரிய ஆடைகளில், தோடர் இன பெண்களே பூ வேலைப்பாடுகள் செய்து கொள்வர். தவிர, பூ வேலைப்பாடுகள் நிறைந்த பல அலங்காரப் பொருட்களையும், தோடர் இன பெண்கள் தயாரிக்கின்றனர். இவற்றை, வெளி மார்க்கெட்டில் விற்க, சில தன்னார்வ அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. தோடர் இன பெண்கள், குழுக்களாக இணைந்தும், பூ வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்களை தயாரித்து, விற்பனை செய்தும் வருகின்றனர்.


முக்கியத்துவம்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, "கீ ஸ்டோன்' நிறுவனம் மற்றும் தோடர் நலவாழ்வு சங்கத்தின் முயற்சியால், தோடர் இன மக்களின் பூ வேலைப்பாடுகளுக்கு, உலகளாவிய முக்கியத்துவத்தை தரும், சென்னை புவியியல் குறியீடு பதிப்பகம் மூலம், "புவியியல் குறியீடு' பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், நீலகிரி தோடர் இன பெண்கள் செய்து வரும் பூ வேலைப்பாடு, உலகில் வேறெங்கும் தயாரிக்கப்படுவதில்லை என, உறுதியளிக்கப்பட்டுள்ளது. தவிர, கலைநயம் மிக்க இந்த படைப்புகளின் பட்டியலில், தோடரின பெண்களின் பூ வேலைப்பாடுகளும் இணைந்துள்ள. இதே போன்று காஞ்சிபுரம் பட்டு, பத்தமடை பாய், நாச்சியார் கோவில் குத்து விளக்கு, தஞ்சாவூர் தலையாட்டு பொம்மை போன்றவையும், புவியியல் குறியீட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இது தான் சிறப்பு:

புவியியல் குறீயிடு என்பது, வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைக்குள், அந்த இடத்திற்கே உரிய சிறப்பு அம்சங்களை, உருவாக்கும் ஒரு பொருளுக்கு, அல்லது கலைக்கு, வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். இக்குறியீட்டை பெறுவதன் மூலம், இக்கலையை வேறு யாரும் விளம்பர நோக்கத்துடன் போலியாக அல்லது வேறு வகைகளில் பயன்படுத்த முடியாமல் பாதுகாக்க முடியும். இக்குறியீட்டின் கீழ், தங்களை பதிவு செய்து கொள்ளும் கலைஞர்களுக்கு மட்டுமே, இக்குறியீட்டை உபயோகிக்கும் உரிமையுண்டு. இதை தவறாக பயன்படுத்துவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parivel - Blore,இந்தியா
14-ஜூன்-201309:56:01 IST Report Abuse
Parivel இதை இந்த பகுதி மக்கள் எப்படி வியாபார ரீதியாக செய்வது என்ற வித்தையை தெரிந்து கொண்டால் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X