பொது செய்தி

தமிழ்நாடு

"கலைகள் களவு போவதை தமிழர்கள் கண்டுகொள்ளவில்லை'

Added : ஜூன் 15, 2013 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: ""சோழர்களின் கலைகள் களவு போவதை பற்றி, தமிழர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்,'' என, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார்.

பிரம்ம கான சபா மற்றும் "நல்லி' சார்பில், கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை, நாரத கான சபாவில், நேற்று நடந்தது. இதில், நல்லி குப்புசாமி செட்டி, ஒலிப்புத்தகத்தை வெளியிட, நடிகை சுகாசினி மணிரத்னம், எழுத்தாளர்எஸ். ராமகிருஷ்ணன், கல்கியின் பேத்தி சீதா ரவி, பெற்று கொண்டனர்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது: தமிழர்கள், வரலாற்றின் பெருமை பேசுவோராக மட்டுமே உள்ளனர். அதன்படி, நடப்பதில்லை. பொன்னியின் செல்வன் நூலை படிப்பதன் மூலமே, சோழர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும். முகலாய சாம்ராஜ்யத்துக்கு இணையானது, சோழர்களின் ஆட்சி. கோவிலில் உள்ள சிலைகளின் கலை அழகை பார்க்காமல், அவற்றில் குங்குமம், வியூதி கொட்டி பாழாக்குகிறோம். தமிழகத்தில், பலர் தமிழில் எழுதுவதையும், பேசுவதையும் மறந்து வருகின்றனர். எங்களுக்கு அது வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழர்கள் சோழர்களின் கலைகளை உணராமல் இருக்கின்றனர். கலைகள் களவு போவது பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தயாரிப்பாளர் வெங்கடராமன், இயக்குனர் பம்பாய் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poornima - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-201304:49:48 IST Report Abuse
Poornima "சோழர்களின் கலைகள் களவு போவதை பற்றி, தமிழர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் " - கலைகள் மட்டும் அல்ல பல கலைபொக்கிஷங்கள் கூட களவு போகின்றன. சிலை திருட்டு நடக்கிறது, பழைய கோவில்களையும் அரண்மனைகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் இடித்துத் தள்ளுகின்றனர். எல்லாம் தமிழரின் அலட்சியத்தால்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X