திருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.அவனியாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன், 28. இவர், மாநகராட்சி பிளம்பர். நேற்று மதியம் 12.30 மணிக்கு பிரசன்னா காலனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று பேர், முருகன் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து, தப்பினர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ஆனந்த், சதீஷ்குமார் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த் மனைவி பாண்டிசெல்விக்கும், முருகனுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதற்காக முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.