சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி இளம்பெண் ஊட்டி கலெக்டரிடம் தஞ்சம்

Added : ஜூன் 18, 2013
Share
Advertisement
ஊட்டி: கட்டாய திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சிப்பதாக, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், இளம்பெண் தஞ்சம் அடைந்துள்ளார். ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு, நேற்று மாலை, 5:30 மணிக்கு, ஒரு இளம்பெண் வந்தார். பெற்றோர், கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக, தெரிவித்துள்ளார். இதையடுத்து, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம், பெண்

ஊட்டி: கட்டாய திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சிப்பதாக, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், இளம்பெண் தஞ்சம் அடைந்துள்ளார். ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு, நேற்று மாலை, 5:30 மணிக்கு, ஒரு இளம்பெண் வந்தார். பெற்றோர், கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக, தெரிவித்துள்ளார். இதையடுத்து, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம், பெண் ஒப்படைக்கப்பட்டார். அந்த பெண், 18 வயது பூர்த்தியாகாதவர்; கோவை, பொள்ளாச்சி சமத்தூர் கொங்கலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மகள் என, விசாரணையில் தெரிய வந்தது.
வரும், 21ம் தேதி, திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக, அவர் தெரிவித்தார். பெண்ணிடம் நகை, பணம் இருந்தது. 18 வயது பூர்த்தியாகததால், அவரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம், கலெக்டர் ஒப்படைத்தார். இந்த பெண் குறித்த விவரத்தை, அவரது பெற்றோரிடம் தெரியப்படுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X