திருப்பூர்:திருப்பூரில்
450 இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு, ஆடு, கோழி இறைச்சி விற்கப்படுகிறது.
இதில், 200க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள், வாரத்தில் அனைத்து நாட்களிலும்,
மீதமுள்ளவை, ஞாயிறு, புதன்கிழமைகளில் மட்டும் செயல்படுகின்றன. விடுமுறை
நாள்என்பதால், ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனை அதிகமாகவும், மற்ற
நாட்களில் சுமாராகவும் இருக்கிறது.இறைச்சி கடைக்காரர்கள், ஆடுகளை
அறுக்கவும், சுகாதாரமாக இறைச்சியை வெட்டி எடுத்துச் செல்லவும்,
சந்தைப்பேட்டையில் ஆடுவதைக்கூடம்அமைக்கப்பட்டது. இங்கு ஆடுகளை வெட்டி,
மாநகராட்சி அதிகாரிகளிடம் "சுகாதாரமான இறைச்சி' என்று முத்திரையிட்டு,
எடுத்துச் செல்ல ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இங்கு யாருமே ஆடுகளை
வெட்ட கொண்டு வருவதில்லை.
இறைச்சி கடைகளின் அருகிலேயே, குப்பை மற்றும் சாக்கடை ஓரங்களில், ஆடுகளை அறுத்து இறைச்சியாக விற்கின்றனர்.இறைச்சியின் சுகாதாரம் பற்றியோ, பொதுமக்கள் பற்றியோ மாநகராட்சி அதிகாரி
களும் அக்கறை கொள்வதில்லை. இதனால், நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளின் இறைச்சியும் சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது.இறைச்சி கடைகளை
கண்காணிக்க
மாநகராட்சி அதிகாரிகள் தவறுவதால், சில இறைச்சி கடைக்காரர்கள்,
ஆட்டிறைச்சியுடன், மாட்டிறைச்சியையும் கலந்து விற்கின்றனர்.
கே.செட்டிபாளையம்,
வெள்ளியங்காடு, தென்னம்பாளையம், நல்லூர்,
பாளையக்காடு, மாஸ்கோ நகர் பகுதிகளில் கலப்பட இறைச்சி விற்கப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய, மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தயக்கம்
காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE