திருப்பூர்:திருப்பூர்
மாவட்டம், தாராபுரம்-மூலனூர் ரோட்டில் உள்ளது, ஆலம்பாளையம். இப்பகுதியை
சேர்ந்தவர் கணேசன், 32; இவரது மனைவி சின்னம்மாள், 26.
இவர்களுக்கு
ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. மீண்டும், சின்னம்மாள் கர்ப்பமானார்;
நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
கணேசன்,
108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்தார். வெள்ளக்கோவிலில் இருந்து 108
ஆம்புலன்ஸ் வந்தது. ஆலம்பாளையத்தில் இருந்து காலை 4.55க்கு புறப்பட்ட
ஆம்புலன்ஸ், தாராபுரம்-மூலனூர் ரோட்டில் உள்ள சங்கராண்டம்பாளையம் ஆரம்ப
சுகாதார நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.சின்னம்மாளுக்கு பிரசவ வலி
அதிகமானதால், பணியில் இருந்த டெக்னீசியன் கோவிந்தராஜ் பிரசவம் பார்த்தார்.
சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும், காலை 6.00 மணிக்கு
சங்கராண்டம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE