பொது செய்தி

தமிழ்நாடு

மருங்காபுரியில் தாலுகா ஆஃபீஸ் கேட்டு மக்கள் "உண்ணாவிரதம்'

Added : ஜூன் 21, 2013
Advertisement

துவரங்குறிச்சி: மணப்பாறை தாலுகாவை பிரித்து, மருங்காபுரி தனி தாலுகாவாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுப்பட்டியில் மருங்காபுரி யூனியன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு பின்புறம் அரசுக்குச் சொந்தமான காலியிடம் உள்ளது.
மருங்காபுரியிலிலிருந்து மூன்று கி.மீ., தூரமுள்ள அந்த இடத்தில் மருங்காபுரி தாலுகா அலுவலகம் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதையறிந்த, மருங்காபுரி, வெட்டுக்காடு, விளாஊரணிப்பட்டி, குழவாய்ப்பட்டியை சேர்ந்த மக்கள் அதிருப்தியடைந்தனர்.
"தாலுகா அலுவலகத்தை மருங்காபுரியிலேயே அமைக்க வேண்டும்' என்று வலியுறுத்தி, மருங்காபுரி பஞ்சாயத்து அலுவலகம் முன், 100 பெண்கள் உட்பட, 400க்கும் மேற்பட்டோர் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, மருங்காபுரி முழுவதும் கடையடைப்பு செய்யப்பட்டிருந்தது. மணப்பாறை தாசில்தார் குளத்தூர் பாண்டியன், டி.எஸ்.பி., மீனா, மருங்காபுரி ஆர்.ஐ., முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்களிடம் பேச்சு நடத்தினர்.
"ஒரு வாரத்துக்குள் கலெக்டரிடம் பேசி நல்ல முடிவெடுக்கப்படும். அதுவரை போராட்டம் நடத்தவேண்டாம்' என்று அவர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில், மதியம் ஒரு மணியளவில், மக்கள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
அதேநேரத்தில், "மருங்காபுரியில் தாலுகா அலுவலகம் அமைக்காவிட்டால் கலெக்டரிடம் ரேஷன் கார்டு ஒப்படைக்கும் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்துவோம்' என்று தாசில்தாரிடம் மக்கள் நூற்றுக்கணக்கான மனுக்களை கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X