தமிழ்நாடு

சினிமா எங்களை கேவலப்படுத்துகிறது வக்கீல் சங்க கூட்டத்தில் திருநங்கை வேதனை

Added : ஜூன் 24, 2013 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை:"தமிழ் சினிமாவில் நாங்கள் கேவலப்படுத்தப்படுகிறோம்; இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, கோவை வக்கீல்கள் சங்க கூட்டத்தில், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தார்.
கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில் மாதம் ஒரு சிறப்பு அழைப்பாளர் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. இம்மாதத்துக்கான சிறப்பு கூட்டம் கோர்ட் கூட்டரங்கில் நடந்தது. வக்கீல்கள் சங்க தலைவர் நந்த
குமார் தலைமை தாங்கினார். செயலாளர் லோகநாதன் வரவேற்றார்.
கூட்டத்தில், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் பேசியதாவது:
இளம் வயதில் ஏற்படும் மாற்றத்தால் நாங்கள், குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, குடும்ப வாழ்க்கையில் இருந்து புறக்கணிக்கப்படுகிறோம்.
பரம்பரையான சொத்தில் பங்கு மறுக்கப்பட்டு, வீட்டை விட்டு துரத்தப்படுவதும் நடக்கிறது. மருத்துவ
மனைகளில் இக்குறையை நீக்க முறையான சிகிச்சை இல்லை. மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை.
பள்ளிகளில் சேர்க்க மறுப்பதால் நாங்கள் கல்வி அறிவு, வேலை வாய்ப்பு பெற முடிவதில்லை. இதனால், எங்கள் எதிர்பார்ப்பு, ஆசைகள் நிர்கதியாகி விடுகின்றன. பொதுமக்கள் ஒதுக்குவதாலும், சமுதாயத்தில் மரியாதையும் கிடைப்பதில்லை. வெறுப்பு காட்டுகின்றனர். இதனால் கிடைத்த வேலைக்கு சென்று, வாழ வேண்டியுள்ளது.
இதையெல்லாம், ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. திருநங்கையாக இருப்பதில் பெருமைப்படுகிறோம். மற்ற பெண்களைப் போல வாழ்ந்து வருகிறோம்.
தமிழகத்தில் 15 ஆயிரம் திருநங்கைகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அதை விட அதிகமாகத்தான் இருப்பார்கள். மதிப்பு, மரியாதையுடன் வாழ, எங்களுக்கும் சட்ட அங்கீகாரம் வேண்டும்.
இதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விளக்கம் கேட்டு மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த மாநில
மும் பதில் அனுப்பாதது வருத்தம் அளிக்கிறது.
சினிமா படங்களில் நடை, உடை, நடிப்புகள் மூலம் நாங்கள் கேவலமாக சித்தரிக்கப்படுகிறோம். இது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு, கல்கி பேசினார்.
இளம் வயதில் ஏற்படும் மாற்றத்தால் நாங்கள், குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, குடும்ப வாழ்க்கையில் இருந்து
புறக்கணிக்கப்படுகிறோம்.
பரம்பரையான சொத்தில் பங்கு மறுக்கப்பட்டு, வீட்டை விட்டு
துரத்தப்படுவதும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
25-ஜூன்-201306:58:41 IST Report Abuse
venkat Iyer நிச்சயமாக அரசு அவர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். அவர்களை கேவலப்படுத்தும் மனிதர்கள் ஒரு சிலர் ,மனித இனத்தில் சேர்க்க கூடாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X