பொது செய்தி

தமிழ்நாடு

"இ-போஸ்ட்' தந்தி சேவை துவக்கம்

Added : ஜூன் 26, 2013 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தபால் துறையில், தந்தி சேவைக்கு மாற்றாக, "இ-போஸ்ட்' தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தபால் துறையில், 160 ஆண்டாக புழக்கத்திலிருந்த, தந்தி சேவை, ஜூலை, 15ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக, "இ-போஸ்ட்' எனப்படும் மின்னணு தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் விடுத்த செய்திக் குறிப்பு: "இ-போஸ்ட்'

சென்னை: தபால் துறையில், தந்தி சேவைக்கு மாற்றாக, "இ-போஸ்ட்' தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தபால் துறையில், 160 ஆண்டாக புழக்கத்திலிருந்த, தந்தி சேவை, ஜூலை, 15ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக, "இ-போஸ்ட்' எனப்படும் மின்னணு தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் விடுத்த செய்திக் குறிப்பு: "இ-போஸ்ட்' முறையில், "ஏ-4 ஷீட் சைஸ்' அளவிலான செய்திகளுக்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். தமிழகம் முழுவதும், கணினி உள்கட்டமைப்பு பெற்ற அனைத்து தபால் நிலையங்களிலும், "இ-போஸ்ட்' தந்தி சேவை வழங்கப்படும். "இ-மெயில்' போல செயல்படும் இம்முறையில், கையால் எழுதப்பட்ட தகவல் அல்லது, "பிரின்ட்' செய்யப்பட்ட தகவல், "ஸ்கேன்' செய்து, கணினி மூலம், தகவல் தருபவர் குறிப்பிடும் இடத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு அனுப்பப்படும். பின், சம்பந்தப்பட்ட இடத்திலுள்ள தபால்காரர் மூலம், அத்தகவல் உரியவரின் இடத்திற்கு கொண்டு சேர்க்கப்படும்.
பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு, "இ-போஸ்ட் கார்ப்பரேட்' என்ற சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 9,999 முகவரிகளுக்கு, ஒரே நேரத்தில் தகவலை அனுப்ப முடியும். "ஏ-4 ஷீட் சைஸ்' அளவிலான ஒரு தகவலுக்கு, ஆறு ரூபாய் வசூலிக்கப்படும். அதே தகவலை, 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்ப, ஒரு தகவலுக்கு, ஐந்து ரூபாய் வசூலிக்கப்படும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh Ramani - Port Said,எகிப்து
26-ஜூன்-201303:18:03 IST Report Abuse
Ganesh Ramani வரவேற்க கூடிய நல்ல திட்டம் ...தன்னை புதுப்பித்து கொண்டு காலத்துக்கு ஏற்றவாறு செயல் படும் மத்திய அரசாங்கத்தின் தபால் துறைக்கு என் வாழ்த்துக்கள் .... தன் பணியை தொடர வாழ்த்துக்கள்..மக்களும் இதை உபயோகித்து பயன்பட வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன் ..
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,இந்தியா
26-ஜூன்-201302:22:24 IST Report Abuse
.Dr.A.Joseph தந்தி சேவை காலத்திற்கேற்ப நவீன படுத்த பட்டுள்ளது என அறிவிக்கலாமே. பழைய தந்தி முறை நிறுத்தப்பட்டு விட்டது எனபதற்கு பதிலாக.நிறைந்த அன்புடன்......................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X