பொது செய்தி

தமிழ்நாடு

இசையுடன் திருக்குறள் சிறை வளாகத்தில் ஒலிபரப்பு

Added : ஜூன் 26, 2013
Share
Advertisement
சிவகங்கை: கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக, திருக்குறளை, இசையுடன் ஒலிபரப்ப, சிவகங்கை கிளைச் சிறையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், அனைத்து சிறைகளிலும், கைதிகள், செய்தித்தாள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் படிக்க விரும்புவோருக்கு, அந்தந்த பகுதி நூலகங்களில் இருந்து, புத்தகங்களை எடுத்து கொடுத்து, படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.சிவகங்கை கிளை

சிவகங்கை: கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக, திருக்குறளை, இசையுடன் ஒலிபரப்ப, சிவகங்கை கிளைச் சிறையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், அனைத்து சிறைகளிலும், கைதிகள், செய்தித்தாள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் படிக்க விரும்புவோருக்கு, அந்தந்த பகுதி நூலகங்களில் இருந்து, புத்தகங்களை எடுத்து கொடுத்து, படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
சிவகங்கை கிளை சிறையில், கைதிகளுக்கென, கடந்த வாரம் நூலகம் திறக்கப்பட்டது. கைதிகளை நல் வழிப்படுத்த, தினமும் காலை, 8:00 மணிக்கு, இசையுடன் திருக்குறள் ஒலிபரப்பப்படுகிறது.
மதுரை சிறை பொறுப்பு டி.ஐ.ஜி., கோவிந்தராஜன் கூறுகையில், ""மதுரை,கோவை சிறைகளிலும், இதுபோன்று, திருக்குறளை இசையில் ஒலிபரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
சிவகங்கை, சிறை கண்காணிப்பாளர், கூரி கூறுகையில், ""சந்தர்ப்ப சூழல்நிலையால், குற்றங்களில் ஈடுபட்டு, இங்கு வருவோருக்கு, மனஅழுத்தம் ஏற்படுகிறது. மனதை நிலைப்படுத்தும் வகையில், புத்தகங்களை படிக்க செய்கிறோம். திருக்குறளை, படித்து தெரிந்து கொள்வதை விட, இசையுடன் கேட்டால், கருத்துக்கள், மனதில் பதியும் என்ற நோக்கில், பாடலாக ஒலிப்பரப்புகிறோம். விடுதலையாகி சென்றபின், குற்றச் செயல்களை தவிர்க்க, இது உதவும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X