அரசியல் செய்தி

தமிழ்நாடு

‘ குவைத் தமிழர்களை காத்திட வேண்டும்’- மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்

Updated : ஜூன் 27, 2013 | Added : ஜூன் 27, 2013 | கருத்துகள் (42)
Advertisement
‘ குவைத் தமிழர்களை காத்திட வேண்டும்’- கருணாநிதி மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சென்னை: சவூதி மற்றும் குவைத்தில் பணியாற்றி வரும் தமிழர்களை வெளியேற்ற அந்நாடுகள் எடுக்கும் முயற்சிக்கு எதிராக தேவைப்படும் நடவடிக்கையில் மத்திய , மாநில அரசுகள் இறங்கி செயல்பட்டு தமிழர்களை காத்திட வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவில் "நிதாகத்" என்ற சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைக்கு வரும் போது , அந்த நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் பத்து சதவிகித இடங்களை சவுதி அரேபியர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் இதன் அடிப்படையில், இப்போதே அதனை அமல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் நாட்டைச் சேர்ந்த பத்து சதவிகிதத்தினரை பணிக்கு அமர்த்துகின்ற காரணத்தால், அந்த இடங்களிலே இதுவரை பணியாற்றி வந்த வெளிநாட்டினரையெல்லாம் திரும்ப அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு துவங்கி விட்டது.


இதன் காரணமாக வரும் ஜுலை மாதம் 3ஆம் தேதிக்குள், அதாவது இன்னும் ஒரு வார காலத்திற்குள்ளாக 60 ஆயிரம் இந்தியர்கள் அந்த நாட்டிலே பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்பட இருக்கிறார்கள். 60 ஆயிரம் இந்தியர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இதைக் காரணமாகக் கொண்டு மேலும் அங்கே பணியாற்றிக் கொண்டிருப்பவர்களையும் வெளியேற்ற முயற்சிகள் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.


அதைப் போலவே குவைத் நாட்டிலே பணிபுரியும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தமிழர்களில் பலர் வெளியேற்றப்படும் நிலைமை உருவாகியுள்ளது.


வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற: அந்த நாடுகளில் பணியாற்றும் தமிழர்கள் பல்லாண்டு காலமாக தங்கள் குடும்பத்தோடு அங்கே குடியேறி அந்த நாடுகளோடு ஐக்கியமாகி விட்டவர்கள். அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற இந்திய அரசும், தமிழ் மாநில அரசும் உதவிட முன் வர வேண்டுமென்று விரும்புகிறார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, அவர்கள் தொடர்ந்து அந்த நாடுகளில் வாழவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும், தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
27-ஜூன்-201315:57:29 IST Report Abuse
Tamilnesan கனிமொழிக்காக காங்கிரஸ் காலில் விழுந்ததை திசை திருப்ப பார்கிறார் இந்த மஞ்ச துண்டு மடாதிபதி. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை இந்த பெரியவர் எண்ணி முடித்து விட்டார் போல இந்த உத்தமர். ஆகையால் தான் இந்த திடீர் தமிழ் மக்கள் பற்று அறிக்கை.
Rate this:
Share this comment
Cancel
ரகு - chennai ,இந்தியா
27-ஜூன்-201315:52:27 IST Report Abuse
ரகு இவரு இனி தந்தி அடிக்க முடியாது. தந்தி துறை மூடப்பட்டு விட்டது. கடிதம் மட்டும் தான் எழுதுவார். இவர் கடிதம் எழுதுவதற்க்கு பயன்படுத்திய கடிதாசி 176 லட்சம் கோடி கிலோவை தாண்டி இருக்கும். இவரை கடிதம் எழுதும் மன்னன் என்று கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யலாம். இவருக்கு இந்தி இங்கிலீஷ் தெரியாது. இவரால் புகழப்படும் இத்தாலி காரிக்கு தமிழ் இங்க்லீஷ் தெரியாது என்ன பாசையில் கடிதம் எழுதிகொள்வார்களோ தெரிய வில்லை.
Rate this:
Share this comment
Cancel
venka venky - மதுரை,இந்தியா
27-ஜூன்-201315:43:10 IST Report Abuse
venka venky நீங்கள் தமிழர்களை வைத்து அரசியல் பண்ணியது போதும் நிறுத்துங்கள். ஆனாலும் தமிழ் மக்களை முழுமையா புரிந்துள்ள அரசியல்வாதி நீங்கள் தான், தமிழர்களுக்கு இது எப்போது புரிய போகுது னு தெரில.....
Rate this:
Share this comment
arulraj - algiers,அல்ஜீரியா
28-ஜூன்-201302:25:49 IST Report Abuse
arulrajஇலங்கை தமிழரை காப்பாத்தி முடிச்சாச்சு. இனி குவைத் தமிழருக்கு கேடுகாலம் ஆரம்பிக்கிறாரா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X