சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோழி திருடிய முன்விரோதத்தில் முதியவர் கொலை: வாலிபருக்கு ஆயுள்

Added : ஜூன் 28, 2013
Advertisement

தூத்துக்குடி : கோழி திருடிய முன்விரோதத்தில், முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம், துலுக்கன்குளத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஆத்திமுத்து,62, கண்ணன்,33. ஆத்திமுத்துவின், கோழியை, கண்ணன் திருடி, சமைத்து சாப்பிட்டுள்ளார். இதனால், அவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டது. 2012 ஜூலை 15ல், கோயில் கொடைக்கு, வரிவசூலிப்பது தொடர்பாக நடந்த ஊர்க் கூட்டத்தில், கோழி திருட்டு குறித்து ஆத்திமுத்து, கண்ணனை கிண்டல் செய்து பேசினார். ஆத்திரமடைந்த கண்ணன், மதுபோதையில் சென்று, அன்றிரவு, வீட்டு முன் சாப்பிட்டிக்கொண்டிருந்த ஆத்திமுத்துவுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. தீர்ப்பளித்த நீதிபதி கமலாவதி, கொலை செய்த கண்ணனுக்கு, ஆயுள் தண்டனை விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X