சூரியநெல்லி மாணவி பலாத்கார வழக்கு: பி.ஜே.குரியனுக்கு எதிரான மனு தள்ளுபடி

Added : ஜூன் 29, 2013 | கருத்துகள் (1)
Advertisement
சூரியநெல்லி மாணவி பலாத்கார வழக்கு: பி.ஜே.குரியனுக்கு எதிரான மனு தள்ளுபடி

தொடுபுழா: "சூரியநெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், ராஜ்யசபா துணைத் தலைவர், பி.ஜே.குரியனையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், தாக்கல் செய்த மனுவை, தொடுபுழா செஷன்ஸ் கோர்ட், நேற்று தள்ளுபடி செய்தது.
கடந்த, 1996ல், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி கடத்தப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபாவின் தற்போதைய துணை தலைவருமான, பி.ஜே.குரியனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும், மாணவி பலாத்கார வழக்கில், அவர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், இந்த பலாத்கார வழக்கில், முக்கிய குற்றவாளி என, அறிவிக்கப்பட்டு, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட, தர்மராஜன் என்பவர், சமீபத்தில், மீடியாக்களுக்கு அளித்த பேட்டியின் போது, "சூரியநெல்லி மாணவி பலாத்கார வழக்கில், பி.ஜே.குரியனுக்கும் தொடர்பு உண்டு. குமுளி விருந்தினர் இல்லத்தில், மாணவி தங்கியிருந்த போது, அங்கு, குரியனை காரில் அழைத்துச் சென்று விட்டேன்' என, தெரிவித்தார். ஆனாலும், பின்னர், இந்தத் தகவலை, தர்மராஜன் மறுத்தார். "நான் ஒரு போதும், குரியனை பார்த்ததில்லை. மீடியாக்களுக்கு பேட்டி அளித்த போது, போதையில் இருந்தேன்' என்று கூறினார். இதற்கிடையில், "தர்மராஜன் தெரிவித்த புகாரின் அடிப்படையில், சூரியநெல்லி மாணவி பலாத்கார வழக்கில், பி.ஜே.குரியனையும், ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும்' எனக்கோரி, அந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண், தொடுபுழா செஷன்ஸ் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்த போது, "அது விசாரணைக்கு உகந்தது அல்ல' எனக் கூறி, செஷன்ஸ் நீதிபதி, ஆப்ரகாம் மேத்யூ தள்ளுபடி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
01-ஜூலை-201314:16:03 IST Report Abuse
Skv கேவலமான செயல் பெண் என்றால் இறக்கம் வேண்டாமா அவள் என்ன போகப்பொருளா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X