ரோட்டோர கடை உணவு பண்டங்களில் நோய் கிருமிகள் தேவை விழிப்புணர்வு!கண்காணிப்பு இல்லாததால் சாக்கடை அருகே தயாரிப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரோட்டோர கடை உணவு பண்டங்களில் நோய் கிருமிகள் தேவை விழிப்புணர்வு!கண்காணிப்பு இல்லாததால் சாக்கடை அருகே தயாரிப்பு

Added : ஜூன் 29, 2013 | கருத்துகள் (1)
Share

சாத்தூர்:ரோட்டோர கடைகளில், திறந்த நிலையில் உள்ள, நோய் பரப்பும் உணவு பொருட்களை வாங்கி உண்பதால், பலரும் உடல்நலம் பாதிக்கும் நிலை தொடர்கிறது. இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், பசிக்கு ஏதோ கிடைத்தால் சரி என்ற என்னமே, பலரது மனதில் ஓடுகிறது.
ஆதலாலே சாலையோரத்தில் விற்கப்படும் உணவு பண்டங்களின் விற்பனை ஜரூராக நடக்கிறது. சிறாரர்கள் முதல் பெரியவர்கள் வரை, பாஸ்ட்புட் என்ற பெயரில், ரோட்டோரங்களில், ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளின் உணவுகளை, விரும்பி உண்கின்றனர்.
சாக்கடை, குப்பை மேடு அருகே இந்த கடைகள் உள்ளதே, இதனால் நம் உடலுக்கு எத்தனை தீமை என்பதை, யாருமே கண்டு கொள்வதில்லை.
இதை சாப்பிட்ட பின் நோய்களால் தவிக்கின் றனர். டாக்டர்கள் அறிவுரைக்கு பின்தான் யோசிக்கின்றனர். இதுவும் சில காலங்கள்தான். அதன் பின்பும், அதே பாஸ்ட்புட் கடைகளையே நாடுகின்றனர். இதுமட்டுமன்றி,ரோட்டோர கடைகளில் விற்பனைக்காக வைக்கப்படும் பொருட்களை, யாருமே பாதுகாப்பாக விற்பனை செய்வதில்லை. அப்படியே தட்டில் குவித்து வைக்கின்றனர். இதில், அருகில் சாக்கடையில் உள்ள கிருமிகள், ரோட்டோர தூசிகள், ரோட்டில் சிலரால் துப்பப்படும் எச்சில் உட்கார்ந்து வரும் ஈக்கள் என, நோய் பரப்பும் கிருமிகள் அனைத்தும், இந்த உணவு பண்டங்களையே மொய்க்கிறது. இதை கடைகார்களும் கண்டு கொள்வதில்லை. அதிகாரிகளும் கண்காணிப்பது இல்லை.
இதனாலே மாவட்டத்தில் பலபகுதிகளில் உள்ள ரோட்டோர கடைகளில், இந்நிலையை காணமுடிகிறது. ரோட்டோர சாக்கடை அருகே, வடை போன்ற உணவு பண்டங்களை தயார் செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் கையுறையை கூட அணிவதில்லை. இதனால் இவர்களது நகங்களில் உள்ள அழுக்குகளும், உணவு பண்டங்களில் கலக்கிறது.
இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. இதனாலே, புதுப் புது நோய்கள் வந்து மக்களை வாட்டி வதைக்கிறது.
இது தொடர்பாக, கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடையே, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X