கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருப்பத்தூர் சந்தன கிடங்கு தீ விபத்து மறு விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு

Added : ஜூன் 30, 2013
Share
Advertisement

சென்னை:திருப்பத்தூர், சந்தன கிடங்கு தீ விபத்து குறித்து, மறு விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கணிசமான இழப்பு சென்னையை அடுத்த, வண்டலூரைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி, கண்ணன் என்பவர், தாக்கல் செய்த மனு:வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில், பெரிய அளவிலான, சந்தனக் கட்டைகள் அடுக்கி வைக்கும் கிடங்கு உள்ளது. அங்கேயே, கூடுதலாக ஒரு கிடங்கும் உள்ளது. இந்த கிடங்கில், 1997, மார்ச் மாதம், தீ பிடித்தது. சந்தனக் கட்டைகள் எரிந்தன. இதனால், அரசுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து விசாரிக்க, நீதிபதி ராமன் கமிஷன் அமைக்கப்பட்டது.விரிவான விசாரணை நடத்தி, அரசுக்கு, அறிக்கை அளிக்கப்பட்டது. வனத்துறையை சேர்ந்தவரின் சதியால், இந்த தீ விபத்து நடந்தது என்றும், வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டது என்றும், தீயை அணைக்க முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டது.நிரூபிக்க தவறியதால்"உண்மையான குற்றவாளியை அடையாளம் காண, தனிப்பட்ட ஏஜன்சியிடம், வழக்கை ஒப்படைக்கலாம்' என, நீதிபதி பரிந்துரைத்தார். இவ்வழக்கில், ஏழு பேர் மீது, மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பு, வழக்கை நிரூபிக்க தவறியதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, அரசு தரப்பில், அப்பீல் செய்யப்படவில்லை. அரசுக்கு ஏற்பட்ட இழப்பை, துல்லியமாக மதிப்பிடவில்லை. குறைத்து மதிப்பிடப்பட்டது. 2007ம் ஆண்டு, இழப்பை கணக்கிடும் போது, 190 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டது. இந்த இழப்பை ரத்து செய்வதற்காக, அப்போது இந்த மதிப்பீடு செய்யப்பட்டது.பரிந்துரை:இழப்பீட்டு மதிப்பு, 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தால், விதிகளின்படி, அதற்கான பரிந்துரையை, முதல்வருக்கு அனுப்ப வேண்டும். துறையிடம் இருந்து, முறையான உத்தரவு பெறப்பட வேண்டும். அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில், வனத்துறை தலைமை காவலரான ரவிகாந்த் உபாத்யா, கையெழுத்திட்டுள்ளார். சம்பவத்தின் போது, மாவட்ட வனத்துறை அதிகாரியாக, இவர் இருந்தார்.தப்பி விடுவர்:கமிஷன் அறிக்கையில், இந்த அதிகாரியின் குறைபாடு பற்றியும், கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த விசாரணையும் நடத்தாமல், அதிகாரிகளை பொறுப்பாக்காமல், இழப்பை ரத்து செய்ய முடியாது. அவ்வாறு, இழப்பை ரத்து செய்தால், குற்றவாளிகள் தப்பி விடுவர். அதனால், தனிப்பட்ட ஏஜன்சியின் விசாரணை அவசியம்.எனவே, 190 கோடி ரூபாய் இழப்பீடு எனக்கூறி, அதை ரத்து செய்வதற்கான பரிந்துரைக்கு, தடை விதிக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி., விசாரணை முடியும் வரை, வனத்துறை தலைமை காப்பாளர் ரவிகாந்த் உபாத்யாவை, தலைமை அலுவலகத்தில் இருந்து, தொலை தூரத்துக்கு மாற்ற வேண்டும். தீ விபத்து குறித்து, மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இழப்பை மதிப்பிட, நிபுணர் குழுவை, அமைக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X