பொது செய்தி

தமிழ்நாடு

கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றமாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

Added : ஜூன் 30, 2013
Advertisement

பணகுடி:பணகுடி டவுன் பஞ்., சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.பணகுடியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கான தேர்வு நடந்தது. அதில் பணகுடி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சிக்காக அரசு சார்பில் பணகுடி டவுன் பஞ்., நிர்வாகம் மாணவிகளுக்கு 7 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கியது. இதன் மூலம் பயிற்சி பெற்ற 20 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பணகுடி டவுன் பஞ்., அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு தலைமை வகித்து டவுன் பஞ்., தலைவர் லாரன்ஸ், மாணவிகளுக்குசான்றிதழ் வழங்கினார். விழாவில் டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி நாமதுரை, பணி ஆய்வாளர் விஜயகுமார், தளவாய்புரம் ஜெயராஜ், கவுன்சிலர் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X