பொது செய்தி

தமிழ்நாடு

தென்காசியில் புதிய தமிழகம்ஆலோசனைக் கூட்டம்

Added : ஜூன் 30, 2013
Advertisement

தென்காசி:தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தென்காசியில் நடந்த புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் வீரா.அரவிந்தராஜா தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர்கள் மூர்த்தி, முருகன், சரஸ்வதிமுருகன், தேவசகாயம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மாடசாமி வரவேற்றார்.கூட்டத்தில் தென்காசி நகரத்தில் சுகாதார சீர்கேட்டை சரி செய்திட வேண்டும். வரும் ஜூலை 23ம்தேதி 200 வாகனங்களில் அமைதி பேரணியில் கலந்து கொள்வது, வரும் ஜூலை 15ம்தேதி கட்சி தலைவரின் கொடியேற்றுதல் சுற்றுப்பயணத்தை சிறப்பாக வரவேற்பு கொடுப்பது, தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும், தென்காசி ரயில்வே மேம்பால பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் முத்து, சந்திரன், மகேஷ், வேல்பாண்டியன், ஆறுமுகம், செல்வக்குமார், சிவசங்கர், மணி, நகர செயலாளர்கள் வெட்டும்பெருமாள், ஆசீர்வாதநாடார், சம்பத், கணேஷன்,மாரியப்பன், தோணி முருகன், ஒன்றிய துணை செயலாளர் இசக்கி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் மகேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். நகர செயலாளர் சிவசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X