பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை உரிமை பாதுகாப்பு கமிஷன்: முழு அளவில் செயல்படுவது எப்போது?

Added : ஜூன் 30, 2013
Advertisement

தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷனுக்கு, தலைவர் மட்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்; ஆறு உறுப்பினர்கள் நியமனத்தில், கால தாமதம் ஏற்படுகிறது.
சிறார் நீதி சட்டம், கல்வி உரிமை சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ஆகியவை, சரிவர அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், கடந்த ஆண்டு, மார்ச் மாதம், இந்த கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. இருந்தும், கமிஷனுக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை.
ஐகோர்ட்டில் வழக்கு
கமிஷன் முழு அளவில் இயங்கும் வகையில், தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர், "பாடம்' நாராயணன், ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
இதற்கு, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கமிஷன் செயல்படுவதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, "2012ம் ஆண்டு டிசம்பருக்குள், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் இயங்க வேண்டும்' என, ஐகோர்ட் உத்தரவிட்டது. தற்போது, கமிஷனுக்கு தலைவராக, சரஸ்வதி ரங்கசாமியை, தமிழக அரசு நியமித்துள்ளது.
கமிஷனுக்கு, ஆறு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதற்காக, 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டும், இதுவரை, உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.
கமிஷன் இயங்குவதற்கு, 2012-13ம் ஆண்டுக்கு மட்டும், 37.33 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில், 1.89 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. "உறுப்பினர்களை விரைந்து நியமிக்க வேண்டும்' என, வழக்கு தொடுத்த, நாராயணன் கோருகிறார்.
கோர்ட் அவமதிப்பு
அவர் கூறும்போது, ""தமிழக மக்கள் தொகையில், மூன்று கோடி எண்ணிக்கையில், குழந்தைகள் இருப்பர். குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க தான், சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. கமிஷனுக்கு, ஆறு உறுப்பினர்களை இன்னும் நியமிக்காதது, ஐகோர்ட் உத்தரவை அவமதிப்பு செய்வது போலாகும். எனவே, இந்தச் சட்டங்களை முறையாக அமல்படுத்தும் வகையில், மாநில கமிஷனுக்கு, விரைவில் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்,'' என்றார்.
ஏற்கனவே, மாநில கமிஷன் தலைவராக, சரஸ்வதி ரங்கசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்து, ஐகோர்ட்டில், நாராயணன் மனுத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தில் கூறியுள்ளபடி, சரஸ்வதி ரங்கசாமி தகுதி பெற்றிருக்கவில்லை என்றும், அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி உள்ளார்.
இவ்வழக்கு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X