இந்து முன்னணி பிரமுகர் கொ‌லை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி பிரமுகர் கொ‌லை

Updated : ஜூலை 01, 2013 | Added : ஜூலை 01, 2013 | கருத்துகள் (2)
Share

வேலூர்: வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டார். வேலூ‌ர் இந்து முன்னணி அமைப்பி்ன் செயலர் வெள்ளையன் (50). இன்று வேலூர் புதியபஸ் நிலையம பின்புறம் முத்து மண்டபம் அருகே ராமகிருஷ்ணா மடம் உள்ளது. இன்று மதியம் 3.20 மணியளவில் மடத்திற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போதுஅவரை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டினர். இதில் 26 இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவம் அறிந்த அவரது ஆதரவாளர்கள் , உடலை எடுத்துச்செல்லவிடாமல் தர்ணா செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வேலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு விஜயகுமார் விரைந்து சென்று விசாரிக்கிறார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X