சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் வீட்டு முன் இளம்பெண் தர்ணா

Updated : ஜூலை 01, 2013 | Added : ஜூலை 01, 2013
Share
Advertisement

சேலம்: ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் சந்திரமோகன். இவருக்கும் அம்மாம்பாளையத்தை சேர்ந்த கலைச்செல்விக்கும் 2007ல் திருமணம் நடந்தது. இருவரும் அம்மாம்பாளையத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கலைச்செல்வி தனது கணவர் சந்திரமோகன், மாமனார் செல்லப்பன் உள்ளிட்ட 14 பேர் வரதட்சனை கேட்டு தன்னை கொடுமைபடுத்துவதாக ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். இதில் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை, எனவும், தனது கணவரை அவரது உறவினர்கள் மறைத்து வைத்திருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கணவர் வீட்டிற்கு சென்றார். அவரை உள்ளே அனுமதிக்காத நிலையில் கணவருடன் சேர்ந்துவாழ வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என கூறி, வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இது குறித்து அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் மீனா கலைச்செல்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்படாத கலைச்செல்வி தொடர்ந்து சந்திரமோகன் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X