வாலிபர்கள் கொலையை கண்டித்து வேலைநிறுத்தம் : காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : ஜூலை 02, 2013
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், நேற்று முன் தினம் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து, பிரிவினைவாத அமைப்பினர், நேற்று, வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பந்திபோரா மாவட்டம், சும்பல் பகுதியில், நேற்று முன் தினம் அதிகாலை, ராணுவ ஆம்புலன்ஸ் மீது,

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், நேற்று முன் தினம் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து, பிரிவினைவாத அமைப்பினர், நேற்று, வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பந்திபோரா மாவட்டம், சும்பல் பகுதியில், நேற்று முன் தினம் அதிகாலை, ராணுவ ஆம்புலன்ஸ் மீது, மர்ம நபர்கள், திடீர் தாக்குதல் நடத்தினர். உடன், ராணுவத்தினர் திருப்பிச் சுட்டதில், இரண்டு வாலிபர்கள் பலியாயினர். "பலியான வாலிபர்கள் இருவரும், பயங்கரவாதிகள் அல்ல; அப்பாவிகள்' என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததோடு, நேற்று முன் தினம், ராணுவத்தினருக்கு எதிராக, போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ராணுவ வீரர்களுக்கு எதிராக, உள்ளூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், அப்பாவிகள் மீது, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டைக் கண்டித்து, ஹுரியத் மாநாட்டு அமைப்பு மற்றும் ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற, பிரிவினைவாத அமைப்புகள், நேற்று வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நேற்று மூடப்பட்டிருந்தன. பதற்றம் நிறைந்த பகுதிகளில், ராணுவத்தினர்
குவிக்கப்பட்டிருந்தனர். ஹஜின் என்ற இடத்தில், ராணுவ பள்ளியை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அதற்கு தீ வைத்தனர். இருந்தாலும், ராணுவ வீரர்களின் துரித நடவடிக்கையால், தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

போலீஸ்காரர் பலி : இதற்கிடையே, புல்வாமா மாவட்டத்தில், ஒரு இடத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, கிடைத்த தகவலை அடுத்து, ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து, அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், போலீஸ்காரர் ஒருவர் பலியானார்; ராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X