உத்தர்கண்ட் வெள்ளம் : காணாமல் போனவர்கள் பட்டியலில் உ.பி., முதலிடம்

Added : ஜூலை 02, 2013 | |
Advertisement
உத்தரகண்டில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களில், அதிகபட்சமாக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 848 பேரை காணவில்லை; குறைந்தபட்சமாக, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரை காணவில்லை. அதே நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த, 12 பேரின் கதி என்ன என்றும் தெரியவில்லை.யாத்திரை சென்றவர்கள் : உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த, பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், அந்த

உத்தரகண்டில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களில், அதிகபட்சமாக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 848 பேரை காணவில்லை; குறைந்தபட்சமாக, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரை காண
வில்லை. அதே நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த, 12 பேரின் கதி என்ன என்றும் தெரியவில்லை.

யாத்திரை சென்றவர்கள் : உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த, பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், அந்த மாநிலத்தவர்கள் மட்டுமின்றி, பல மாநிலங்களில் இருந்து, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற, புனித தலங்களுக்கு யாத்திரை சென்றவர்களும் சிக்கினர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், ஏராளமானவர்கள் பலியாகி விட்டாலும், உயிர் தப்பியவர்களை மீட்க, போர்க்கால அடிப்படையில், மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசுக்காகவோ, உத்தரகண்ட் அரசுக்காகவோ காத்திருக்காமல், பல மாநில அரசுகள், தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி, தங்கள் மாநிலத்தவரை மீட்டு வருகின்றன.

உ.பி.,யில் 848 : இப்படி, கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வந்த மீட்பு பணிகள், தற்போது ஓரளவு இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இருந்தாலும், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களில், இன்னும், 3,340 பேரை, கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களில், அதிகபட்சமாக, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த, 848 பேரை காணவில்லை. அதேபோல், குறைந்த பட்சமாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த, ஒருவரை காணவில்லை. வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்காக, உத்தரகண்ட் தலைநகர், டேராடூனில் முகாமிட்டி ருந்த, தமிழக அரசின் டில்லி பிரதிநிதி ஜக்கையன் தலைமையிலான மூவர் குழுவினர், தமிழகத்தைச் சேர்ந்த பலரை மீட்டு, சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும், இன்னும், 12 பேர் மீட்கப்படவில்லை.

பணி நிறைவு : உத்தரகண்டில், ராணுவத்தினரின் தேடும்பணி, கிட்டதட்ட முடிவுறும் நிலையில் உள்ளது. இதனால், காணாமல் போன, தமிழக நபர்கள், பற்றி, தகவல்கள் கிடைப்பது அரிது என்றே கூறப்படுகிறது. இவர்கள் எல்லாம், பலராலும், ஏற்கனவே அறியப்பட்ட இடங்களில் இருக்க, வாய்ப்பு இல்லை.
காடுகளுக்குள் உள்ள கிராமங்களுக்குள் வேண்டுமானால், சிக்கியிருக்கலாம். இல்லையெனில், வெள்ளத்திலிருந்து தப்பித்து, பாதை மாறி, வனப்பகுதிகளுக்குள் சென்றிருக்கலாம் என,
நம்பப்படுகிறது.மேலும், கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் எல்லாம், சிதைந்து விட்டன. வானிலையும் சரியாக இல்லை. அவ்வப்போது மழை பெய்கிறது. அதனால், காணாமல் போனவர்கள், அவர்களாகவே, எங்காவது ஒரு இடத்தில், மீட்பு படையினரிடம் சரண் அடைந்தால் தான் அடையாளம் காண முடியும்.

இணையதளம் : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து, மீட்கப்படுவோரின் பெயர் மற்றும் விவரங்களை, உத்தரகண்ட் மாநில அரசு, அவ்வப்போது, இணைய தளம் மூலம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்தப் பட்டியலையும், தமிழக அரசு அதிகாரிகள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். ராணுவம் மற்றும் மீட்புப் படையினரின் தேடுதல் பணி முடிவடைய, இன்னும் சில நாட்களாகலாம். அதற்குள்
தமிழக நபர்கள் வந்தால் சந்தோஷமே.

மாயமான 12 தமிழர்கள்: தேடும் பணி தீவிரம் உத்தரகண்ட் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கி மாயமான,
தமிழக பக்தர்கள், 12 பேரை, தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலிருந்து, உத்தரகண்ட் மாநிலத்திற்கு, புனித யாத்திரை சென்றவர்கள், வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை மீட்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், வருவாய் துறை அதிகாரிகள் டில்லி மற்றும் டேராடூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள், உத்தரகண்ட் மாநில அதிகாரிகளுடன் இணைந்து, 503 பேரை மீட்டனர். அவர்களில், 413 பேர், விமானம் மூலமாகவும், 90 பேர் ரயில் மூலமாகவும், தமிழகம் வந்தனர்.
சென்னை, அண்ணா நகரை சேர்ந்த, தொழில் அதிபர் சந்திரமவுலி, தனது மனைவி ரமாவுடன், வெள்ளத்தில் சிக்கினார். நிலச்சரிவில் சிக்கி, காயமடைந்த ரமா, பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்டார்; அவரது கணவர் குறித்த விவரம் தெரியவில்லை. அதேபோல், விழுப்புரத்திலிருந்து சென்ற, 36 பேரில், இருவர் இறந்து விட்டனர். உயிர் தப்பிய, 24 பேர் மீட்கப்பட்டனர். அவர்களுடன் சென்ற, கீதா, கருணாமூர்த்தி, கனகவள்ளி, நரசிம்மன், வசந்தகுமாரி, ஸ்ரீலதா, ராதாபாய், சம்பத்குமாரி, சித்ரா, லட்சுமி, ஆகிய,10 பேரைக் காணவில்லை. அதேபோல், காரைக்காலை சேர்ந்த குமரேசன் என்பவரையும் காணவில்லை.அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டேராடூனில் முகாமிட்டுள்ள, தமிழக அதிகாரிகள் குழுவினர், உத்தரகண்ட் அதிகாரிகள் உதவியுடன், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X