சவுதியில் வெளிநாட்டவருக்கான சலுகை காலம் நீட்டிப்பு

Updated : ஜூலை 02, 2013 | Added : ஜூலை 02, 2013 | கருத்துகள் (2)
Advertisement

சவுதி அரேபியா : சட்ட மீறலாகவும், உரிய பணியனுமதியின்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர் தாயகம் திரும்பவோ, சட்டத்திற்குட்பட்டு தங்கள் ஆவணங்களைச் சரி செய்துகொள்ளவோ சவுதி அரேபியா அறிவித்திருந்த சலுகைக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் தேதிக்குள் (அரபு புது வருடம் முஹர்ரம் 1) எவ்வித அபராதமோ, தண்டனையோ இன்றி அத்தகையோர் தம் நாடு திரும்பவோ, முறையான பணி தேடி அமரவோ செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான பாஸ்போர்ட் இன்றியும், பணி ஆவணங்கள் இன்றியும் தவித்த பல வெளிநாட்டவருக்கு, குறிப்பாக இந்தியருக்கு இந்தச் சலுகைக் கால நீட்டிப்பு பெரும் ஆறுதலாகவும், ஆசுவாசமாகவும் அமைந்துள்ளது. முன்னதாக, சட்ட மீறலாக உரிய ஆவண அனுமதியின்றி தங்கிப் பணிபுரிவோர் ஜூலை 3ம் தேதிக்குப் பின்னர் பிடிபட்டால் கடும் சிறைவாசமும், அபராதமும் விதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வாறு தாயகம் திரும்புவோர் மீண்டும் பணி வாய்ப்பு பெற்று ஒழுங்கான சட்ட முறைமைகளுக்குட்பட்டு மீண்டும் சவுதி வரலாம் என்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது. துயருறும் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்குரிய அவசர பாஸ்போர்ட் சான்று பெறவும் அல்லது முறையான பணி வாய்ப்புகளைப் பெறவும் இந்தியத் தூதரகம் விழிப்புணர்வுடன் செயல்பட்டது. ரியாத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட இந்தியர் அமைப்புகள் அதில் பெரும்பங்கு ஆற்றியது குறிப்பிடத்தக்கது. சவுதி மன்னரின் இந்த சலுகை அறிவிப்புக்கு ரியாத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amjath - Dammam,சவுதி அரேபியா
02-ஜூலை-201317:20:26 IST Report Abuse
Amjath தன்னுடைய நாட்டு குடிமக்களை வெளிநாட்டினர் என்று கூறி அவமதித்து அவர்களுக்கு உரிமை வழங்க மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும்.. தன்னுடைய நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் சட்ட விரோதமாக குடியிருந்து வேலை செய்து வருவதை தன்னுடைய பரந்த மனதுடன் கனிவுடன் புனித ரமலானை முன்னிட்டு சலுகை காலம் நீட்டிட்டு கொடுத்த சவுதி அரசின் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய ஆட்சியின் நல்ல பண்பினை உலகிற்கு காட்டியுள்ளனர்...
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
02-ஜூலை-201317:15:05 IST Report Abuse
kumaresan.m " இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்திய தூதரக அதிகாரிகளின் வருமானத்தில் மண்ணை அள்ளி போட்டுவிட்டீர்களே பிரபு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X