உடுமலை:வங்கி ஊழியர் சங்கம் சார்பில், பொதுக்குழுக்கூட்டம் மற்றும் தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் வைரவிழா கொண்டாட் டம் உடுமலையில் நடந்தது. தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் ஸ்ரீதர், திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் மனோகரன், பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சீத்தாராமன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஊழியர் சங்கம் ரகுபதி பேசினர்.
தொடர்ந்து, இந்தாண்டிற்கான நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக வெள்ளைச்சாமி, துணைத்
தலைவர் காசி விஸ்வநாதனும் தேர்வு செய்யப்பட்டனர். இணை செயலாளர், பொருளாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்தனர்.
கூட்டத்தில், "அத்தியாவாசிய பொருட்கள் அனைத்தையும் பொது வினியோகம் மூலமாக மக்களுக்கு வினியோகம் செய்து, விலைவாசியை கட்டுப்படுத்தலாம். இத்திட்டம் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வங்கித்துறை வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஏற்றாற்போன்று, ஆட்கள் இல்லை; போதுமான ஊழியர்களை வேலைக்கு பிஎஸ்ஆர்பி மூலமாக நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அனைத்து கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் சம்பளம், வேலை உத்தரவாதம் கிடைக்கவும், காலியாக உள்ள இடங்களை நிரப்பி கூட்டுறவு அமைப்பை பலப்
படுத்த மாநில அரசை வலியுறுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.