வீட்டு வேலைக்காரருடன் ஓரின சேர்க்கை : 79 வயதான ம.பி., நிதி அமைச்சர் ராஜினாமா| Dinamalar

வீட்டு வேலைக்காரருடன் ஓரின சேர்க்கை : 79 வயதான ம.பி., நிதி அமைச்சர் ராஜினாமா

Added : ஜூலை 06, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போபால்: தன் வீட்டில் வேலையாளுடன், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக, ம.பி., மாநில நிதி அமைச்சர், ராகவ்ஜிக்கு எதிராக, புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சர் பதவியை, அவர் ராஜினாமா செய்தார்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நிதி அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, மூத்த தலைவரான, ராகவ்ஜி, 79, பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், அவரின் வீட்டில் வேலை பார்த்து வந்த ஒருவர், அமைச்சருக்கு எதிராக, போலீசில், பரபரப்பு புகார் அளித்தார். அதில், அமைச்சர், தன்னுடன், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக, அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பான, "சிடி' யையும், போலீசாரிடம் அளித்தார். இந்த தகவல் வெளியானதும், ம.பி., அரசியலில், பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான, ராகவ்ஜி, அனுபவம் நிறைந்த அரசியல்வாதி. 10 ஆண்டுகளாக, நிதி அமைச்சராக பதவி வகிக்கிறார். அவர் மீதான புகார் எழுந்ததும், அமைச்சர்
பதவியை ராஜினாமா செய்யும்படி, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அவருக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, அவர், தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை, கவர்னர் ராம் நரேஷ் யாதவ், ஏற்றுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X