பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சளுக்கு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி

Added : ஜூலை 12, 2013
Advertisement

கோபிசெட்டிபாளையம்: மஞ்சள் விலை வீழ்ச்சியால், கோபி சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு மஞ்சள் பரப்பளவு குறைந்துள்ளது. பாசனங்களுக்கு தண்ணீர் திறப்பால் மஞ்சள் பயிரிடலாம், என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
பருவமழை ஏமாற்றம் மற்றும் மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைக்காததால், விவசாயிகள் மஞ்சளை பயிரிடாமல் இருந்தனர். கடந்த ஆண்டில், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளில், 4,000 ஏக்கரில் மஞ்சளை பயிரிட்டனர். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எல்.பி.பி., பாசனத்துக்கும், ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்படும், என விவசாயிகள் எதிர்நோக்கி உள்ளனர்.
மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டால், ஓரளவுக்கு லாபம் கிடைப்பதால், கோபி சுற்று வட்டாரத்தில் மஞ்சள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
கோபி, டி.என்.பாளையம், கள்ளிபட்டி, பங்களாபுதூர் ஆகி ய சுற்று வட்டாரத்தில் தடப்ப ள்ளி, அரக்கன்கோட்டை பாசன நீர் மூலம் மஞ்சள் சாகுபடியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.
தடப்பள்ளி பாசனப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
கோபி சுற்று வட்டாரத்தில் அதிகளவில் கரும்பு, மஞ்சள், நெல் பயிரிடப்படுகிறது. சென்ற, 2009ம் ஆண்டில் ஏற்பட்ட மஞ்சள் விலை உயர்வு காரணமாக, கரும்பு விவசாயிகள் பலரும், மஞ்சளுக்கு மாறினர். மஞ்சள் விலை தொடர்ந்து சரி வடைந்ததால், மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.
மஞ்சள் விலையை, விவசாயிகளே நிர்ணயம் செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத போதிலும், மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலை நன்றாக இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படவாய்ப்பில்லை.
கோபி சுற்று வட்டாரத்தில், கடந்தாண்டில், 1,400 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டது. நடப்பாண்டு இதுவரை, 150 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மஞ்சள் பரப்பளவு, 400 முதல், 500 ஏக்கர் வரை அதிகரிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடவு செய்ய விவசாயிகள், கூலி ஆட்கள் சரியாக கிடைக்காததால், விவசாயப்பணியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X