சென்னை பயிற்சி கன்னியாஸ்திரி ஒடிசாவில் பாலியல் பலாத்காரம்

Added : ஜூலை 16, 2013
Share
Advertisement

பெர்காம்பூர்: சென்னையில், கன்னியாஸ்திரி பயிற்சி பெறும் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா, காந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த, 28 வயது பெண், சென்னையில் உள்ள தனியார் கான்வென்டில், கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரை தொலைபேசியில் அழைத்த மர்மப் பெண், அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, உடனே ஊருக்கு புறப்பட்டு வரும்படி தெரிவித்தார். இதனால் பதறிப்போன கன்னியாஸ்திரி, தன் தாயை பார்ப்பதற்காக, கடந்த, 5ம் தேதி, ரயிலில் சென்றார். தன் சொந்த ஊர் செல்வதற்காக, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது, அங்கு காத்திருந்த அவரது உறவினர்கள் இருவர் உட்பட மூவர், அவரை, கஜபதி மாவட்டம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களுக்கு கடத்திச் சென்று, ஒரு வாரத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்தனர். பின், அவரை, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில், 11ம் தேதி இறக்கிவிட்டு, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவோம் என, மிரட்டி விட்டுச் சென்றனர்.

வீட்டுக்கு வந்த கன்னியாஸ்திரி, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து, தாயிடம் கூறினார். பின், இருவரும், பாலிகுடா போலீஸ் நிலைய அதிகாரி, கே.வி.சிங்கிடம் புகார் அளித்தனர். போலீசார் இந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களான, ஜதிந்திரா, ஜோகேந்திரா ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து, கந்தமால் மாவட்ட கூடுதல் எஸ்.பி., கோபிந்த் சந்திர மாலிக் கூறியதாவது: கன்னியாஸ்திரியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது, கடத்தல், நம்பிக்கை மோசடி, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போன் செய்து தவறான தகவல் அளித்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகிறோம். குற்றவாளிகள் மற்றும் கன்னியாஸ்திரிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X