விழுப்புரம் : ஒரு நபர் குழு பரிந்துரைபடி சுகாதார ஆய் வாளர்களுக்கு ஊதிய முரண்பாட்டை சரி செய்து உத்தர விட்ட அரசுக்கு தமிழ்நாடு சுகாதார ஆய் வாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சிவகுரு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் 22 ஆண்டுகால கோரிக் கையை நிறைவேற்றி, பல நோக்கு சுகாதார மேற்பார் வையாளர் (பெண்) என்ற பகுதி சுகாதார செவிலியருக்கு அடிப்படை ஊதியம் 9,300 ரூபாய் மற்றும் கிரேடு ஊதியம் 4,200 ரூபாய் வழங்கியது போல் பல நோக்கு சுகாதார மேற் பார்வையாளர் (ஆண்) என்ற சுகாதார ஆய்வாளர் நிலை 1ல் உள்ளவர்களுக்கும் அடிப்படை ஊதியம் 9300 ரூபாயும், கிரேடு ஊதியம் 4200 ரூபாய் வழங்க அரசு உத்தர விட் டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி, சுகாதாரத் துறை அமைச் சர் பன்னீர்செல்வம் மற் றும் அதிகாரிகளுக்கு தமிழ் நாடு சுகாதார ஆய்வாளர் கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.