சென்னை:சென்னை நாவலூர், தாழம்பூர் டி.எஸ்.நாராயணசுவாமி கலை, அறிவியல் கல்லூரியில், கடந்த 25ம் தேதியன்று கல்லூரி கட்டடங்களுக்கு தமிழ்ச் சான்றோர் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது.தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கல்யாணி அன்புசெல்வன் கலந்து கொண்டு, கட்டடங்களுக்கு தொல்காப்பியர், பாரதியார், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், உ.வே.சா., நூலகம் என்ற பெயர்களைச் சூட்டிச் சிறப்பித்தார்.கல்லூரி நெறியாளர் முனைவர் ராமபூஷணம் சிறப்புரையாற்றினார்.