நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., கலை, அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு ஆய்வரங்க துவக்க விழா இன்று நடக்கிறது. நாமக்கல் பி.ஜி.பி., கலை , அறிவியல் கல்லூரியில் தமிழ்ஆய்வுத்துறை சார்பில் மாணவ, மாணவியர்களுக்கிடையேயான ஆராய்ச்சி, ஆய்வுக் கட்டுரைகள், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை வளர்க்கும் பொருட்டு கல்லரியில் டாக்டர் பழனி ஜி பெரியசாமி ஆய்வரங்கம், வியாழன் அரங்கம், இலக்கிய அமைப்பு ஆகியவை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன் நான்காம் ஆண்டு துவக்க விழா கல்லூரி கலையரங்கில் இன்று நடக்கிறது. கல்லூரி தாளாளர் கணபதி தலைமை வகிக்கிறார். துறைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகிக்கிறார். பேராசிரியர் ராஜரத்தினம் வரவேற்கிறார். முதல்வர் பத்மாவதி பேசுகிறார். சேலம் பெரியார் பல்கலை தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் மாதையன், கோவை டாக்டர் என்.ஜி.பி., கலை, அறிவியல் கல்லூரி தமிழ்துறை உதவி பேரசிரியர் மணிகண்ட் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். பேராசிரியர் செல்வகுமாரி ஆகியோர் உட்பட அனைத்து துறை தலைவர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.