சம்பவம் செய்தி

தமிழ்நாடு

‘ நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே., ’- சொன்னபடி வாழ்ந்து காட்டிய வாலி இன்று இல்லை

Updated : ஜூலை 19, 2013 | Added : ஜூலை 18, 2013 | கருத்துகள் (184)
Advertisement
‘ நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே., ’- சொன்னபடி வாழ்ந்து காட்டிய வாலி இன்று இல்லை

சென்னை: எம்.ஜி.ஆர்., காலம் முதல் இன்றைய இளம் நடிகர் வரை பல ஆயிரம் பாடல்களை எழுதிக்குவித்த பிரபல கவிஞர் வாலி இன்று இல்லை. இவருக்கு வயது 82 . வாழ்த்துப்பா பாடுவதில் மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகிப்பது இவருக்கு கை வந்த கலை. தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். நேரத்திற்கு ஏற்றால் போல் நினைத்த உடன் கவிதைகளை கொட்டி போடும் திறம் படைத்தவர் வாலி.
தரைமேல் பிறக்க வைத்தான்: இவர் எழுதிய பாடல்களில் சரித்திரத்தில் மறையாத பாடல்கள் ஆயிரம் உண்டு. புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாக ஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. இது போன்ற பாடல்கள் ஏராளம்.







கந்தனே உன்னை மறவேன்:

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் என்ற இவர் எழுதிய பக்தி பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா., யாரோடு யார் வந்தது நான் போகும் போது யாரோடு யார் வந்தது. என்ற பாடல் அனைவரது உள்ளத்தையும் வருத்தும்.



நுரையீரல் தொற்று :

கடந்த ஜூன் 14 முதல் நுரையீரல் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இன்று அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இவரது மறைவுக்கு திரை உலகத்தினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


வாலிப கவிஞர் :
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். இவரது தத்துவ வார்த்தைகள் கொண்ட பாடல்கள் எம்.ஜி.ஆரை மக்களிடம் பிரபலப்படுத்த பெரிதும் உதவியாக இருந்தது. தமிழ் சினிமா உலகில் வாலிப கவிஞர் என அழைக்கப்பட்ட கவிஞர் வாலி இதுவரை சுமார் 15 ஆயிரம் பாடல்கள் வரை எழுதியுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் ஜொலித்தவர். இவரது படைப்புகள் என்றும் ஜொலிக்கும்.


‘ அவர் ஒரு குழந்தை ’- தேவா புகழஞ்சலி:
மறைவு குறித்து இசையமைப்பாளர் தேவா கூறுகையில்; கவிஞர் வாலி ஒரு குழந்தை மாதிரி. இவருடன் நாங்கள் பணியாற்றியது ஒரு பாக்கியம். இவரது இழப்பு பேரிழப்பு. இவ்வாறு தேவா தெரிவித்தார்
அவர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தது பெருமை. இந்த காலத்தில் அவர் ஓல்டு ஸ் கோல்டு . 3 தலைமுறையினருக்கு பாட்டு எழுதியவர். என்று புகழாரம் சூட்டினார் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ்.

Advertisement




வாசகர் கருத்து (184)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramki - madurai  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூலை-201315:11:04 IST Report Abuse
ramki இமயம் சரிந்தது
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
19-ஜூலை-201312:47:05 IST Report Abuse
Matt P பெயர் பெற்றாலும் பெரியவர் என்ற பெயருக்கு ஏற்றவராக வாழ்ந்த வாலிக்கு அஞ்சலி....கவிதைகள் பல்லாயிரம் படைத்தார். .புவி தனில் வாழ்வாங்கு வாழ்ந்தார்....எழுதுவோம் கவிதை அந்த கவிஞ்நின் தனி திறன் நினைத்து.....
Rate this:
Share this comment
Cancel
s g prasad - ahmedabad,இந்தியா
19-ஜூலை-201312:27:21 IST Report Abuse
s g prasad வாலியின் வார்த்தை வித்தையை ரசியுங்கள் - ஒரே வரியில் படத்தின் கதையை சொல்லி விடுவார் .உதாரணம் - மௌன ராகத்தில் -மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர வழி இல்லையே . படகோட்டியில்- தரை மேல் பிறக்க வைத்தான் கண்ணீரில் மிதக்க வைத்தான் .வாலிப வாலி என்றும் இளமையாக நமது மனதில் இருப்பாராக.எஸ் ஜி பிரசாத் அஹேமேதாபாத்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X