சேலம் பஸ் ஸ்டாண்ட்சிறைபிடிப்பால் பதட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலம் பஸ் ஸ்டாண்ட்சிறைபிடிப்பால் பதட்டம்

Added : ஜூலை 20, 2013
Share

சேலம்: பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் மரவனேரி, நான்கு ரோடு, ஓமலூர் மெயின்ரோடு வழியாக, பா.ஜ., கட்சியினர், புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்றனர்.அங்கு நுழைவு வாயிலில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார், அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால், அவர்கள் பஸ்கள் வெளியேறும் பாதையில் அமர்ந்து கொண்டனர். இரவு, 11 முதல், 12 மணி வரை எழுந்து செல்லவில்லை. அதனால், 60க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியே செல்லவில்லை.மேலும், வெளியூரில் இருந்து வந்த பஸ்கள், மூன்று ரோடு, ஐந்து ரோடு, கந்தம்பட்டி பைபாஸ் ஆகிய இடங்களில், ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.உறவினர்கள் அதிர்ச்சி: சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர் ரமேஷின் உறவினர்கள், துபாயில் இருந்து, அவரை பார்ப்பதற்காக சேலம் வந்தனர். இந்நிலையில், ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதால், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X