சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலியை பிரிந்ததாக கூறிஇன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி: நான்குநேரி அருகே வாலிபர் கைது

Added : ஜூலை 20, 2013
Share
Advertisement

நான்குநேரி:நான்குநேரி அருகே இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி கொலை முயற்சி செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நான்குநேரி அருகேயுள்ள பரப்பாடி அண்ணாநகரை சேர்ந்தவர் முத்து மகன் ஜெய்கணேஷ்(23). இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவை சென்றனர். இதுகுறித்து மாணவியின் தந்தை விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கோவை சென்று இருவரையும் மீட்டு வந்தனர். இதுதொடர்பாக போலீசார் ஜெய்கணேஷிடம் இருந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஜெய்கணேஷ் சென்னை சென்று கார் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை பரப்பாடி பஸ் ஸ்டாப் அருகில் இன்ஸ்பெக்டர் லிங்கதிருமாறன் மற்றும் போலீசார் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஜெய்கணேஷ், என் காதலை நீங்கள் பிரித்துவிட்டீர்கள் என கூறி போலீசாரை தாக்க முயன்றார். இன்ஸ்பெக்டர் லிங்க திருமாறன் தடுக்க முயற்சி செய்த போது, அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்கணேஷை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X