அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., அதிக தொகுதிகளில் போட்டியிடும் : கருணாநிதி சூசக அறிவிப்பு

Added : ஜூலை 25, 2013 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: ""லோக்சபா தேர்தலில், தி.மு.க., அதிக தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறைந்த தொகுதிகளிலும் போட்டியிடும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், ""2004ல், நாட்டில் மதசார்பற்ற
தி.மு.க., அதிக தொகுதிகளில் போட்டியிடும் :  கருணாநிதி சூசக அறிவிப்பு

சென்னை: ""லோக்சபா தேர்தலில், தி.மு.க., அதிக தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறைந்த தொகுதிகளிலும் போட்டியிடும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், ""2004ல், நாட்டில் மதசார்பற்ற ஆட்சி அமைய கருணாநிதி பாடுபட்டார். அதேபோல் மீண்டும் நல்லாட்சி அமைய அவர் வழி காட்ட வேண்டும்,'' என்றார்.

பின்னர் கருணாநிதி பேசியதாவது: முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. நான் சிறுவயதில் பார்த்த முஸ்லிம் லீக் இப்போது இல்லை. அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, தமிழகத்திலிருந்து, முதல் கண்டன குரல் நான் கொடுத்தேன்.
நான் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காக, காதர் மொய்தீன் குறைவாக பேசினார். அதேபோல் எல்லாவற்றிலும் அவர் குறைவாக எடுத்துக் கொண்டு, எனக்கு, அதாவது தி.மு.க.,வுக்கு அதிகமாக ஒதுக்குவதற்கு அவர் ஒத்துழைப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.க., ஆட்சியில், மிலாது நபிக்கு விடுமுறை; உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது; சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டது; ஹஜ் பயணிகள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யும் முறை ரத்து செய்து, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படி, சிறுபான்மை மக்களின் நலனுக்காக, தி.மு.க., ஆட்சி நடந்தது. இவ்வாறு, அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
26-ஜூலை-201316:45:35 IST Report Abuse
சு கனகராஜ் வழக்கம் போல சிறிய கட்சிகளுக்கு இதயத்தில் மட்டுமே இடம் என்று சொல்லிவிடலாமே
Rate this:
Cancel
Conjivaram Rajan Gopalkrishnan - Chennai,இந்தியா
26-ஜூலை-201315:29:50 IST Report Abuse
Conjivaram Rajan Gopalkrishnan பழக்க தோஷம் .. எது கிடைத்தாலும் அதில் பெரும் பகுதி தனக்கே ..
Rate this:
Cancel
Paramasivam - Chennai,இந்தியா
26-ஜூலை-201311:12:09 IST Report Abuse
Paramasivam இப்படி, சிறுபான்மை மக்களின் நலனுக்காக, தி.மு.க., ஆட்சி நடந்தது///// அப்போ பெரும்பான்மை மக்களுக்காக நீங்க ஆட்சி நடத்தவே இல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X