சினிமாக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட நமக்கில்லை : பெஸ்ட் ராமசாமி பாய்ச்சல்

Added : மே 27, 2010 | கருத்துகள் (46) | |
Advertisement
அவினாசி : "தமிழகத்தில் சினிமாக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. அந்தளவிற்கு விவசாயிகளை அரசு கண்டு கொள்வதேயில்லை' என்று, திருப்பூர் மாவட்டம், அவினாசியில் நடந்த போராட்டத்தில் கொ.மு.க., மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி பேசினார். "கள் இறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும், அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என்பன உள்ளிட்ட 10 அம்ச
kongu munetra kazhagam,toddy,protest.கொ.மு.க.,கள் அனுமதி, போராட்டம்

அவினாசி : "தமிழகத்தில் சினிமாக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. அந்தளவிற்கு விவசாயிகளை அரசு கண்டு கொள்வதேயில்லை' என்று, திருப்பூர் மாவட்டம், அவினாசியில் நடந்த போராட்டத்தில் கொ.மு.க., மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி பேசினார்.


"கள் இறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும், அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அவினாசியில் நேற்று கொ.மு.க., சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட்டில் நடந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னுக்குட்டி முன்னிலை வகித்தார்.

பெஸ்ட் ராமசாமி பேசியதாவது: தமிழகத்தின் மொத்த வருவாயாக உள்ள ரூ.46.30 கோடியில், 55 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், பென்ஷனுக்கும் செலவாகிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கப்படுகிறது. ஆனால், அரிசியிலிருந்து கிடைக்கும் தவிடு ஒரு கிலோ எட்டு ரூபாய். இப்படியிருந்தால் விவசாயி வாழவே முடியாது.

தமிழகத்தில் சினிமாக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட, விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை; நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் என்று சினிமாத்துறைக்கு சலுகைகள் அதிகமாக கிடைக்கிறது. ஆனால், தமிழக அரசுக்கு 48 சதவீத வருவாயை அளிக்கும் கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. நம்முடைய உழைப்பால், நாம் கொடுத்த வரிப்பணத்தை பிறருக்கு வாரியிறைத்து, பெயர் சம்பாதிக்கின்றனர். இவ்வாறு பெஸ்ட் ராமசாமி பேசினார்.

1,012 பேர் கைது: மறியல் செய்ய முயன்ற கொ.மு.க., தொண்டர்கள் 76 பெண்கள் உட்பட 1,012 பேரை டி.எஸ்.பி., காமராஜ் கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்கள், அவினாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

4,000 பேர்: கள் இறக்க அனுமதி கேட்டு, நேற்று கோவை செஞ்சிலுவைச் சங்க கட்டடம் முன், கொ.மு.க., மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் சிறை நிரப்பும் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தது. இதில் ஈடுபட்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டனர்; இவர்களில் 360 பேர் பெண்கள்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பன்னீர்செல்வம் - SanDiego,யூ.எஸ்.ஏ
28-மே-201023:03:21 IST Report Abuse
 பன்னீர்செல்வம் நான் இதை ஆதரிக்கிறேன். விவாசயம் ஒன்னுதான் உயிர் காக்கும் தொழில். இது நன்றாக இருந்தால் நல்ல மழை இருக்கும். ஆரோகியமம் இருக்கும், வாழ்க விவாசயம் !!!
Rate this:
Cancel
கொங்கு ஞானம் - bangalore,இந்தியா
28-மே-201022:14:17 IST Report Abuse
 கொங்கு ஞானம் சினிமா காரங்க பாராட்டு விழா எடுப்பாங்க. நீங்க என்ன எடுப்பீங்க? அவர் சினிமா காரங்களையும் கவர்மென்ட் ஸ்டாப்பையும் நம்பி இருக்கிறாரு
Rate this:
Cancel
கதிரவன் - Namakkal,இந்தியா
28-மே-201020:01:37 IST Report Abuse
 கதிரவன் இது ஜாதி கட்சி இல்லை, இருந்தாலும் பரவாயில்லை! கொங்கு நாட்டு விவசாயிகளின் வளர்ச்சிக்கு உரிமை கோரும் "விவசாயிகள் கட்சி" எனவே தயவு செய்து அனைத்து விவசாயிகளும், விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களும், விவசாயத்தை ஆதரிக்கும் அனைவரும் தங்களின் ஆதரவை கொடுக்க வேண்டும் ஏனெனில் வேறு எந்த அரசியல் கட்சியும் "உழவனை", "குடியானவனை" ஆதரிக்கும் நிலை தற்போது இல்லை. இந்த கூத்தாடிகள் கும்மியடிக்கும் தமிழகத்தில், எனவே விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்பட, விவசாயம் செழிக்க, சமுதாயத்தில் விவசாயத்தின் மதிப்பு உயர, கொங்கு நாடு மட்டும் அல்லாமல் அனைத்து தமிழக விவசாயிகளும் ஒன்று கூடி மாபெரும் சக்தியாகி போர் கொடி தூக்க வேண்டும் உன்ன உணவு கொடுக்கும் விவாயிகள் வாழ்வில் ஒளி பிறக்க வழி செய்வோம். இவன்.... கல்லுரி முதுநிலை வரை விவசாயம் செய்து கொண்டே நுண் உயிரியல் பட்டம் பெற்று பின்னர் தந்தைக்கு உதவியாகவும் குடும்ப தொழிலான விவசாயத்தை தொடர நினைத்தும் நமது தமிழ் நாட்டின் / இந்தியாவின் சமுதாய சூழ்நிலைகளின் காரணத்தால் முடியாமல் வெளி நாட்டில் வந்து வேலை செய்து நிதி திரட்டி கொண்டிருக்கும்... மீண்டும் நாடு திரும்பி விவசாயம் செய்ய வரும் விவசாயி மகன் "நாமக்கல் - கதிரவன்"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X