அரசியல் செய்தி

தமிழ்நாடு

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு ; பிரதமருடன் சந்திப்பு

Updated : ஜூலை 27, 2013 | Added : ஜூலை 27, 2013 | கருத்துகள் (1)
Share
Advertisement
Non-Telangana ministers and MPs meet PM, தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு ; பிரதமருடன் சந்திப்பு

புதுடில்லி: ஆந்திராவை 2 ஆக பிரிக்கக்கூடாது என தெலுங்கானா அல்லாத பகுதியை சேர்ந்த காங்., அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் இன்று பிரதமரை சந்தித்து பேசினர். இதனால் காங்கிரஸ் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் திணறும் நிலை நீடிக்கிறது. "ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, பொதுமக்கள், அரசியல்வாதிகள், 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்த காரணத்துக்காகவே, சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) என்ற கட்சி உருவானது. ஆனாலும், மத்திய அரசு, இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல், தள்ளிப் போட்டு வந்தது.இந்நிலையில், 2009ல், தெலுங்கானா போராட்டம், விஸ்வரூபமெடுத்தது, சந்திரசேகர ராவ், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். கலவரம் வெடித்ததால், விரைவில் தனி மாநிலம் உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கலவரம் அடங்கியதும், தெலுங்கானா விவகாரத்தையும் மத்திய அரசு வழக்கம் போல், மறந்து விட்டது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, தெலுங்கானா போராட்டம், மீண்டும் தீவிரமடைந்தது. தெலுங்கானா கோரிக்கையை, மத்திய அரசு அலட்சியப்படுத்துவதாக கூறி, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்., மூத்த தலைவர்கள் சிலர், காங்கிரசிலிருந்து வெளியேறி, டி.ஆர்.எஸ்., கட்சியில் சேர்ந்தனர்.


மற்றொரு பக்கம், "ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமே தொடர வேண்டும். தெலுங்கானா தனி மாநிலம் அமைத்தால், அதை எதிர்த்து, கடும் போராட்டம் நடத்துவோம்' என, கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள், போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த பகுதி எம்.பி.க்கள் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினர். மாநிலத்தை பிரிக்க கூடாது என வலியுறுத்தினர்.


மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியை சேர்ந்த, 17 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முன்தினம், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர்.ஆந்திராவின் கடலோர மாவட்டமான, நெல்லூரைச் சேர்ந்த, காங்., எம்.எல்.ஏ.,க்கள், பிரபாகர் ரெட்டி, கிருஷ்ணா ரெட்டி ஆகியோர், தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களின் பதவிகளை ராஜினாமா செய்வதாக, நேற்று அறிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v j antony - coimbatore,இந்தியா
27-ஜூலை-201317:34:52 IST Report Abuse
v j antony ஒரு சுயநலவாதிகளின் வீண் போராட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X