முதல்வரை துதி பாடுவதற்காக செம்மொழி மாநாடு : அ.தி.மு.க., செயற்குழு வேதனை

Added : மே 27, 2010 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : "மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்னைகளால் தமிழக மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில், மற்றவர்கள் தன்னை பாராட்டி துதி பாட வேண்டும் என்று கருணாநிதி நினைப்பது வேதனைக் குரியது' என, அ.தி.மு.க., செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அ.தி.மு.க., செயற்குழுவில்
world classical tamil conference, admk party meeting, செம்மொழி மாநாடு,அ.தி.மு.க., செயற்குழு

சென்னை : "மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்னைகளால் தமிழக மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில், மற்றவர்கள் தன்னை பாராட்டி துதி பாட வேண்டும் என்று கருணாநிதி நினைப்பது வேதனைக் குரியது' என, அ.தி.மு.க., செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அ.தி.மு.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்னைகளால் தமிழக மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உலகில் உள்ள தமிழ் இனமே கவலையில் ஆழ்ந்திருக்கிறது. இந்த நேரத்தில், உலகத் தமிழ் மக்களின் பணத்தை வீணாக்கி செம்மொழி மாநாட்டை தி.மு.க., நடத்துகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில், மற்றவர்கள் தன்னை பாராட்டி துதி பாட வேண்டும் என்று கருணாநிதி நினைப்பது வேதனைக்குரியது.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்திற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்தும் அதை செயல்படுத்த கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கேரளாவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளார்.

ஆந்திர அரசு பாலாறு, பென்னையாற்றின் குறுக்கே தடுப் பணை கட்டும் பணியில் தீவிரம் காட்டியுள்ளது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற உடன் கங்கை, காவிரி இணைப்பு என்பது தென்னக நதிகள் இணைப்பு என மாறி விட்டது. பின், தமிழக நிதிகளின் இணைப்பு என்று சுருங்கி விட்டது. தேசிய நதி நீர் இணைப்பின் அவசியத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தாத தி.மு.க., அரசிற்கு செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது.

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற உடன் அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (கோவை), அண்ணா பல்கலைக்கழகம் (திருச்சி), அண்ணா பல்கலைக்கழகம் (நெல்லை) என பிரிக்கப்பட்டது. தனக்கு வேண்டியவர்கள், துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெறுவது தான் இதன் நோக்கம்.

தற்போது மதுரை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் என்ற புதிய பல்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அரசின் இது போன்ற நடவடிக்கை ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ந ர.ரவிசங்கர் - coimbatore,இந்தியா
20-ஜூன்-201015:14:08 IST Report Abuse
 ந ர.ரவிசங்கர் This pain will give a long relief in assuming power in the coming state assembly elections. Why other parties are at atll consulted and various committee works are not at all given to other MLAs of political parties but the DMK ministers retained all powers for this meet
Rate this:
Cancel
வெங்கட்ராமன். நா - Bangalore,இந்தியா
28-மே-201014:54:06 IST Report Abuse
 வெங்கட்ராமன். நா தெரியாமதான் கேக்கறேன், இந்த செம்மொழி மாநாடுன்னா என்ன பண்ணுவாங்க? அதுக்கு எதுக்கு இத்தன செலவு?
Rate this:
Cancel
ramu - manjathundaanpatti,இந்தியா
28-மே-201005:53:21 IST Report Abuse
 ramu தமிழ்நாடு இன்று 95000 கோடி கடனில் உள்ளது. அரசாங்கமே டாஸ்மார்க் வருமானத்தில் நடந்துகொண்டு இருக்கிறது.திருட்டு ரயிலில் சென்னை வந்து அரசியல் நடத்தியவர்கள் இன்று திரைப்பட தயாரிப்பாளர்களாகவும் தொழிலதிர்பகளாகவும் உள்ளனர்.இவர்களுக்கு நாட்டை பற்றி கவலை இல்லை. இவர்களுக்கு வெண் சாமரம் வீசி வாழ்த்து பாடினால் ஜாலியாக மெய்மறந்து இருப்பார்கள்.தமிழ் நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு விலைவாசி உயர்வு இந்த இக்கட்டான நிலைமையில் வரி பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யும் இந்த அரசுக்கு முடிவு வெகு தொலைவில் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X