ஏழைகளுக்கான வீடுகளை பெற எம்.எல்.ஏ.,க்கள் விண்ணப்பம்

Updated : மே 28, 2010 | Added : மே 27, 2010 | கருத்துகள் (4) | |
Advertisement
மும்பை : பொருளாதார ரீதியாக, மிகவும் பின்தங்கியுள்ளவர்களுக்கான வீடுகளை பெறுவதற்கு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 65 எம்.எல்.ஏ.,க்களும் விண்ணப்பித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா வீட்டு வசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீடுகள் கட்டப்பட்டு குலுக்கல் முறையில் அந்த வீடுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், பொருளாதார
Maharashtra, M.L.A.,எம்.எல்.ஏ.,ஏழை

மும்பை : பொருளாதார ரீதியாக, மிகவும் பின்தங்கியுள்ளவர்களுக்கான வீடுகளை பெறுவதற்கு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 65 எம்.எல்.ஏ.,க்களும் விண்ணப்பித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


மகாராஷ்டிரா வீட்டு வசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீடுகள் கட்டப்பட்டு குலுக்கல் முறையில் அந்த வீடுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான வீடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என்றும், இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விண்ணப்பங்களை பரிசீலித்த அதிகாரிகளுக்கு பெரும் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் காத்திருந்தது. மகாராஷ்டிராவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 65 எம்.எல்.ஏ.,க்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள பிரிவினருக்கான வீடுகளுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த எம்.எல்.ஏ.க்களின் பெயர் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், 65 எம்.எல்.ஏ.,க்களின் விண்ணப்பங்களையும் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கே seshadri - chennai,இந்தியா
28-மே-201020:00:49 IST Report Abuse
 கே seshadri இவர்களுக்கு பிச்சை எடுக்கும் புத்தி போகவே போகாது போலிருக்கிறது. இவர்கள் ஏழைகளா? நல்ல வேளை athikarikal கண்டு பிடித்து விட்டார்கள். இல்லையெனில் இவர்கள் அந்த வீட்டை வாங்கி சின்ன வீடு வைத்து கொண்டிருப்பார்கள். வெட்கம் கெட்ட பிச்சைக்காரர்கள்.
Rate this:
Cancel
KThirumalairajan - Rajakilpakkam,இந்தியா
28-மே-201019:26:53 IST Report Abuse
 KThirumalairajan சேவை மனப்பான்மை இல்லாது 'பொருள் சேர்ப்பு' மனப்பான்மையுடன் வருகிறவர்களிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?ஞானத்தை சேர்க்க வேண்டியவர்களெல்லாம் வீட்டுக்கு ஆசைப்படுவதென்பது, மும்பையிலும் உண்டு போலும்!
Rate this:
Cancel
ப.சங்கர் - தேனி,இந்தியா
28-மே-201010:46:18 IST Report Abuse
 ப.சங்கர் ஏழை எளிய எம்எல்ஏ க்களே, ஏன் இப்படி வெக்கப்பட்டு கொண்டு பிச்சை எடுக்குறீர்கள், ஏற்கனவே ஓட்டு கேட்டு பிச்ச எடுத்த அனுபவம் இருக்கிறதல்லவா, ப்ளீஸ் தைரியமாக வாருங்கள் பிச்சை கேளுங்கள் எங்களால் முடிந்ததை தருகிறோம். இதில் உழலுக்கு வழி கொடுக்காமல் கடமையை செய்த அதிகாரிகள் மனசாட்சியுள்ள நல்லவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X