ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில், தேசிய தர மதிப்பீட்டு நிர்ணய குழுவினர் மூன்றுநாள் ஆய்வு நடத்தினர். ஆய்வில், மங்களூர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சையது அக்கில் அகமது, லக்னோ பல்கலை பேராசிரியர் அனில் ஸ்ரீவஸ்தவா, கோட்டையம் பெஸிலியஸ் கல்லூரி முதல்வர் ஜேக்கப் குரியன் ஈடுபட்டனர்.
கல்லூரி கட்டமைப்பு, கல்வி மேம்பாடு, சமூகபணி, பேராசிரியர்களின் ஆய்வு மதிப்பீடு, முன்னாள் மாணவர், பெற்றோர் கருத்துகேட்பு நடந்தது. ஆய்வு மதிப்பீட்டை, பெங்களூரு தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப உள்ளனர். ஏற்பாடுகளை, கல்லூரி நிர்வாக செயலளர் எ.எ.சுப்பராஜா, கல்லூரி தலைவர் தனுஷ்கோடி, முதல்வர் வெங்கட் ராமன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.