விமான ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்கள் 58 பேர் நீக்கம்| Air india strike : 50 persons suspended | Dinamalar

விமான ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்கள் 58 பேர் நீக்கம்

Updated : மே 29, 2010 | Added : மே 28, 2010 | கருத்துகள் (26) | |
புதுடில்லி : திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு விமான சேவைகளை ஸ்தம்பிக்க வைத்த ஊழியர்கள் 58 பேரை, ஏர்-இந்தியா நிறுவனம் அதிரடியாக பணியிலிருந்து நீக்கியுள்ளது. அத்துடன் இரண்டு தொழிற் சங்கங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது. "ஊழியர்களுக்கான மே மாத சம்பளம் தாமதமாக வழங்கப்படும்' என்ற ஏர்-இந்தியா நிறுவனத்தின் அறிவிப்பை கண்டித்தும், தொழிற்சங்கத் தலைவர்கள்
விமான ஊழியர்கள் 58 பேர் நீக்கம்

புதுடில்லி : திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு விமான சேவைகளை ஸ்தம்பிக்க வைத்த ஊழியர்கள் 58 பேரை, ஏர்-இந்தியா நிறுவனம் அதிரடியாக பணியிலிருந்து நீக்கியுள்ளது. அத்துடன் இரண்டு தொழிற் சங்கங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது."ஊழியர்களுக்கான மே மாத சம்பளம் தாமதமாக வழங்கப்படும்' என்ற ஏர்-இந்தியா நிறுவனத்தின் அறிவிப்பை கண்டித்தும், தொழிற்சங்கத் தலைவர்கள் மீடியாக்களிடம் தாராளமாக பேசுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏர் - இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களில் ஒரு பிரிவினர் கடந்த செவ்வாயன்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களாக இவர்கள் நடத் திய வேலை நிறுத்தத்தினால், ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.இதற்கிடையில், ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி, ஏர் - இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கலாம் என, உத்தரவிட்டது. டில்லி ஐகோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவால், வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் வாபஸ் பெற்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் 58 பேரை ஏர் - இந்தியா நிறுவனம் நேற்று அதிரடியாக பணி நீக்கம் செய்தது. அத்துடன் ஊழியர்களின் இரண்டு தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்தது. அந்தத் தொழிற்சங்கங்களின் அலுவலகங்களுக்கும் "சீல்' வைக்கப்பட்டது. இதனால், எரிச்சல் அடைந்துள்ள தொழிற்சங்கத் தலைவர்கள், ஜூன் 12ம் தேதி முதல் மற்றொரு வேலை நிறுத்தம் நடைபெறும் என, அறிவித்துள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர் உட்பட பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 58 பேருக்கும், அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான நோட்டீஸ்களை ஏர் - இந்தியா நிர்வாகம் அனுப்பியுள்ளது. இனி அவர்கள் மீதான துறைரீதியான நடவடிக்கை மற்றும் முடிவு பின்னர் எடுக்கப்படும். இதுதவிர பொறியாளர்கள் 15 பேர் உட்பட 24 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது. ஏர் - இந்தியா நிறுவனத்தில் பெரிய அளவில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல் முறை.அத்துடன் ஏர் கார்ப்பரேஷன் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய விமான பொறியாளர்கள் சங்கம் ஆகிய இரு சங்கங்களின் அங்கீகாரத்தையும் ஏர்- இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் 60 சதவீதம் பேர் இந்தச் சங்கங்களில் இடம் பெற்றுள்ளனர். தொழிற்சங்கங்களின் அங்கீகார உத்தரவு ரத்து நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டது. உடன் அவற்றின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்து தொழிற்சங்கங்கள் வழக்கு தொடர்ந் தால், தங்களை கேட்காமல் தடை விதித்து விடக்கூடாது என்பதற்காக, கோர்ட்டுகளில் கேவிட் மனுக்களை தாக்கல் செய்யவும் ஏர் - இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.சதி: ஏர் - இந்தியா நடவடிக்கை பற்றி ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் காடியான் கூறியதாவது: ஜூன் 12ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யும் வகையில், மற்றொரு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். ஏர் - இந்தியா நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஜாதவ், சர்வாதிகாரமாக செயல்படுகிறார். அவர் விமான நிறுவனத்தை அழிக்கிறார். தொழிலாளர்களை போராடத் தூண்டி, அதன் மூலம் லாக்- அவுட் செய்ய முற்படுகிறார். இதுபெரிய சதி. ஹிட்லர் அணுகுமுறையை அவர் பின்பற்றுகிறார். சமரச பேச்சுவார்த்தை நடவடிக்கைக்கு நாங்கள் கையெழுத்திட்ட பின், ஊழியர்கள் மீது ஏர் - இந்தியா நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத ஊழியர்களுக்கும் பணி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தலைமை தொழிலாளர் ஆணையர் கேட்டுக் கொண்டதாலும், ஏர் - இந்தியா நிறுவனத்தின் நலன் கருதியும் நாங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றோம். இரண்டு தொழிற்சங்கங்களுக்கும் நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள் இரவோடு இரவாக "சீல்' வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த எங்களின் ஆவணங்கள் திருத்தப்பட்டதோடு, பல ஆணவங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. எந்த ஆவணமும் இல்லாமல், நாங்கள் எப்படி கோர்ட்டிற்கு செல்ல முடியும். கோர்ட் அனுப்பிய நோட்டீசிற்கும் நாங்கள் பதில் அளிக்க முடியாத நிலையில் உள்ளோம். இவ்வாறு காடியான் கூறினார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X