காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Updated : மே 29, 2010 | Added : மே 28, 2010 | கருத்துகள் (72) | |
Advertisement
சென்னை : பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால், சில ராசிக்காரர்களுக்கும், குறிப்பாக, ராகு, கேது திசை மற்றும் புத்தி நடப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என, ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அரசியல் தலைவர்களுக்கு ஆகாது என்றும் கூறப்பட்டுள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில்.
அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பா?

சென்னை : பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால், சில ராசிக்காரர்களுக்கும், குறிப்பாக, ராகு, கேது திசை மற்றும் புத்தி நடப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என, ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அரசியல் தலைவர்களுக்கு ஆகாது என்றும் கூறப்பட்டுள்ளது.சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். திருப்பதிக்கு அருகில் உள்ள இக்கோவிலில் ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்வர். ராகு, கேது தோஷத்திற்குரிய பரிகார தலமாக கருதப்படும் காளஹஸ்தி சிவன் கோவிலின் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததால், தற்போது ராகு திசை அல்லது வேறு திசையில் ராகு புத்தி நடப்பவர்கள், கேது திசை அல்லது வேறு திசைகளில் கேது புத்தி நடப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அவர்கள் இந்த இரு கிரகங்களுக்கும் உரிய பரிகாரங்களை செய்து கொள்வது நன்மை தரும். அதாவது, விநாயகருக்கோ அல்லது துர்கைக்கோ பூஜைகள் செய்வது சிறப்பு தரும். மேலும், இந்தக் கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளதால், அந்த மாநிலத்தில் இயற்கை சீற்றங்களாலும், பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் பாதிப்பு ஏற்படலாம். பெரிய அளவிலான விபத்துகள், கோர சம்பவங்கள் நிகழவும் வாய்ப்பு உண்டு. மேலும், தற்போது கோச்சார ரீதியாக, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராகு, கேது கிரகங்கள் பாதகமான நிலையில் உள்ளதோ, அவர்களும் மேற்கண்ட கிரகங்களுக்கு உரிய பரிகார பூஜைகளை மேற்கொள்ளலாம். வீடுகளிலும், கோவில்களிலும் நெய் விளக்கேற்றி வழிபடுவதும் நன்மை தரும்.ஜோதிடர் சிவஓம்குருரவி: பஞ்ச பூத தலங்களில் ஒன்றான காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது, அரசியல் தலைவர்களுக்கு ஆகாது. கேது ஸ்தலமாக காளஹஸ்தி இருப்பதால், இது நிச்சயம் ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.  குறிப்பாக, தமிழகத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு தர்ம பரிபாலனம் செய்வதே சிறந்த பரிகாரம்.ஜோதிடர் பூவை நாராயணன்: பொதுவாக கோவில் கோபுரம் இடிந்து விழுதல், கொடிமரம் எரிதல் போன்ற நடக்க தகாத, வினோத சம்பவங்கள் ஏற்படுவது தேச நலனை பாதிக்கும். இதற்கு வைகானச கல்ப சூத்திரத்தில் கூறியுள்ளபடி பஞ்ச சுக்தங்களை படித்து, "அற்புத சாந்தி ஹோமம்' செய்ய வேண்டும். இதை வைகானச ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் இத்தகைய ஹோமங்கள் செய்யப்படும். மேலும், தெய்வீக விருட்சங்களை பொது இடத்தில் நட வேண்டும். அதிலும், வாயு ஸ்தலமான காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்தது வருந்தத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும்.ஜோதிடர் முத்துகுமார்: காளஹஸ்தி ஆந்திராவில் இருந்தாலும், அங்கு பூஜை நடைமுறைகள் தமிழகத்தில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை பின்பற்றியே நடந்து வருகிறது. அங்கு பூஜை செய்பவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான். காளஹஸ்தி ராஜகோபுரம் பழமையானதாக இருந்தாலும், அது இடிந்து விழுந்து தரை மட்டமாகியுள்ளதால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு பரிகாரம் அந்த கோவிலிலேயே செய்யப்படும். பொதுவாக இது போன்ற சம்பவங்களின் போது 90 நாட்களுக்குள் விளைவுகள் தெரிந்து விடும். அதற்குள் தெரியாவிட்டால் பாதிப்பு ஏதும் இல்லை என்று அர்த்தம். வெகு விரைவில் சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இது தமிழகத்தில் தெரியாவிட்டாலும், அது அரசு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதற்குள் பரிகார பூஜையை செய்ய வேண்டும்.தமிழக அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா: காளஹஸ்தி கோவில் கோபுரத்தில், கடந்த 88ம் ஆண்டே விரிசல் ஏற்பட்டு விட்டது. இதை அப்போது சரியான முறையில் சரிசெய்யவில்லை. ஆற்றை ஒட்டி கோவில் அமைந்திருப்பதால், மண்ணில் நெகிழ்வு தன்மை ஏற்பட்டு, மணல் சரிந்து, கோபுர சுவர்களுக்குள் சுண்ணக் கலவை விடுபட்டு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். பூமி தளத்தில் ஏற்பட்ட மாற்றங் களால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். அந்த காலத்தில் கோபுரங்கள் எல்லாம் ஒரு கல்லின் மீது மற்ற கல்லை அடுக்கி மலைகளை அடுக்குவது போல் தான் உருவாக்கப்படும். அப்படி இருக்கும் போது ஆரம்பத்திலேயே கோபுர விரிசலை சரியான முறையில் சரி செய்திருக்க வேண்டும். ஐநூறு ஆண்டுகள் ஆன இந்த கோபுரத்தில், முதலில் விரிசல் ஏற்பட்ட போதே கோபுர அஸ்திவாரத்தை, "ரேப்ட்' போட்டு வலுப் படுத்தியிருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததில் தெய்வக் குற்றம் இருப்பதாக தெரியவில்லை.ஜோதிடர் சிவஅண்ணாமலைதேசிகன்: காளஹஸ்தி ராகு, கேது பரிகார தலம். இந்தியாவின் லக்னம் ரிஷபம், அமெரிக்காவின் லக்னம் தனசு. இந்த இரு லக்னங்களுக்கும் தற்போது ராகு, கேது நிலை சரியில்லை. ரிஷிப லக்னத்திற்கு எட்டாம் இடமான தனுசு லக்னத்திலும் தற்போது ராகு உள்ளது. மிதுனத்தில் கேது உள்ளது. இந்நிலையில், ராகு, கேது பரிகார தலமான காளஹஸ்தி கோவிலின் கோபுரம் இடிந்து விழுந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும். போர் கூட வரலாம். பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இரு கிரகங்களும் இதே நிலையில் இருந்த போது தான் ராஜிவ் படுகொலை நடந்தது. அதன் விளைவாக தற்போது இலங் கையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்ததற்கு வேறு பரிகாரம் கிடையாது. மக்கள், தலைவர்கள் மத்தியில் தர்ம சிந்தனை வளர்ந்தால் மட்டுமே, ராகு, கேது கிரகங்களின் பாதகமான சூழலை மாற்ற முடியும்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prabhu - chennai,இந்தியா
02-ஜூன்-201015:40:58 IST Report Abuse
 prabhu ஆயிரம் பெரியார் என்ன லட்சம் பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது ..........
Rate this:
Cancel
பழ. சரவணகுமரன் - tamilnadutirupur.,இந்தியா
30-மே-201011:37:25 IST Report Abuse
 பழ. சரவணகுமரன் போங்கடா போலப்பில்லாத மனிதர்களா கோபுரம் இடிந்தால் என்ன? உயிர் போகலையே அது வரை சந்தோச படுங்கடா. அதை எல்லாம் விட்டுட்டு அவனுக்கு ஆகாது இவனுக்கு ஆகாது சோசியம் பார்கிறார்களாம் சோசியம். எதாவது கிடைத்தால் போதும் சும்மா ஊதி பெரிதாக்குவது மனித இயல்பு. சிலைகள் கோபுரங்களை தாங்குவது இல்லை ( நாம் தான் சிலைகள்) இப்படிக்கு பழ. சரவணகுமரன். திருப்பூரில் இருந்து.
Rate this:
Cancel
ரா.ராசு - Trichy,இந்தியா
29-மே-201022:17:58 IST Report Abuse
 ரா.ராசு "எல்லாம் அவன் செயல்" " எல்லாம் விதிப்படியே நடக்கும்" "கடவுள் தடுப்பதை யாரும் கொடுக்க முடியாது; கடவுள் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது" இப்படி சொல்லும் சோதிடர்கள் தங்களது கருத்தாக "தலைவர்களுக்கு கெடுதல்" நாட்டிற்கு கெட்ட காலம்" என்று தங்களுக்கு தோன்றியதையெல்லாம் சொல்லுகிறார்கள். எல்லா சோதிடர்களும் ஒன்றாகவா சொல்லுகிறீர்கள்..? ஒரு சோதிடர் ஒரு மாதிரியும், மற்றொரு சோதிடர் அதற்கு எதிர்மாறாகவும் சொல்லுகிறார்கள். எப்படியோ ஒன்று நடக்கும். உடனே "தான் சொல்லியது போல நடந்தது விட்டது" என்று பெருமை அடித்துகொள்வது. அதையும் நம்புவார்கள் அப்பாவிகள். பிறகென்ன ஏமாந்தவர்கள் கிடைத்துவிடுவார்கள். அவர்கள் சம்பதிப்பதற்க்கு / வாழ்வதற்கு வழி கிடைத்துவிடும். இதற்க்கு பிச்சை எடுப்பது மேல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X