விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யு.ஏ., மேல்நிலைப்பள்ளியில் கண்தான அடையாள அட்டை வழங்கும் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழா மற்றும் சர்.சி.வி.ராமன் அறிவியல் மன்ற துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.காமராஜர் பிறந்த நாள் விழாவான கல்வி வளர்ச்சி நாள் விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் பத்மா தலைமை வகித்து பேசினார். மதுரா கோட்ஸ் தொழிலாளர் உறவு மேலாளரும், பள்ளி செயலாளருமான பாஸ்கரன், பள்ளி முகமை செயலாளர் பாலகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியர் சிவசைலம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விழாவில் அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவசைலம், திருநெல்வேலி அகில இந்திய வானொலியின் மூத்த செய்தி அறிவிப்பாளர் உமாகனகராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.சர்.சி.வி.ராமன் அறிவியல் மன்ற துவக்க விழாவில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் அழகப்பன், பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி பேராசிரியர் அமீஸ் ஆபிரகாம், உதவி தலைமையாசிரியர்கள் சகாயராஜ், வேலம்மாள், ஆசிரியை ஞானசுதா ஆகியோர் பேசினர்.கண்தான அடையாள அட்டை வழங்கும் விழாவிற்கு மாவட்ட செஞ்சிலுவை சங்க கன்வீனர் கிரேஸ் அன்னஹெலினா தலைமை வகித்து கண்தானம் செய்த 116 பள்ளி மாணவர்களை பாராட்டி பேசினார். விழாவில் அம்பை செஞ்சிலுவை சங்க சலீம், விகாசா பள்ளி முதல்வர் ஜவகர் ஜேசுதாசன், நுகர்வோர் பேரவை பொறுப்பாளர் சண்முகசுந்தரம், பள்ளி செஞ்சிலுவை சங்க ஆலோசகர் கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.