கோவை: கலெக்டர் அலுவலக
வளாகத்தில் உள்ள நுகர்வோர் கோர்ட்களில் ஆஜராகும் வக்கீல்கள் தங்களுக்கென
புதிதாக ஒரு சங்கத்தை துவக்கினர். இதற்கு "கன்ஸ்யூமர் கோர்ட் வக்கீல்கள்
சங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் துவக்க விழா, நுகர்வோர்
கோர்ட் வளாகத்தில் நடந்தது. நுகர்வோர் கோர்ட்டில் மட்டும் ஆஜராகும்
வக்கீல்கள் 50 பேர் தற்போது உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக ராதா ரமணன்,
துணைத் தலைவர்களாக சேதுமாதவன், மாலவன், செயலாளராக சக்தி கணபதி, இணைச்
செயலாளராக தங்கராசு, பொருளாளராக அருண் மற்றும் இணை பொருளாளராக சாந்தி
நாராயணன் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தவிர பொதுக்குழு உறுப்பினர்களாக
ஆறு வக்கீல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.