கோவை:
ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு கைதாகி சிறையில்
அடைக்கப்பட்டவர் மீது "குண்டாஸ்' பாய்ந்தது. கோவை, கரும்புக்கடை பகுதியை
சேர்ந்தவர் சிக்கந்தர் பாட்ஷா, 35. இரண்டு வாரங்களுக்கு முன் பட்டணம்புதூர்
பகுதியில், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்த முயற்சித்தபோது, கோவை உணவு
பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய
சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சிக்கந்தர் பாட்ஷா பல
நாட்களாக தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டரின்
குண்டாஸ் உத்தரவு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிக்கந்தர் பாட்ஷாவுக்கு
முறைப்படி சிறை அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.