பொது செய்தி

தமிழ்நாடு

கரை புரண்டு ஓடிய காவிரியில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

Added : ஆக 03, 2013 | கருத்துகள் (8)
Advertisement
people, offer, prayer,Cauvery, river,காவிரி,ஆடிப்பெருக்கு, கோலாகலம்

காவிரியில் தண்ணீர் கரை புரண்டோடியதால், காவிரிக் கரையோர புதுமணத் தம்பதியர், ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக, நேற்று கொண்டாடினர்.


வாழ்வு செழிக்க:

தமிழகத்தில், ஆடிப்பெருக்கு விழா, ஆண்டுதோறும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, காவிரிக் கரையோர விவசாயிகள், பயிரையும், வாழ்வையும் செழிக்க வைக்கும் நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், புதுமணத் தம்பதியர், வாழ்வில் என்றும் இன்பமும், எல்லா வளமும் பொங்கும் வகையிலும், ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுகின்றனர். கர்நாடகா அரசு, கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருந்து, 2ம் தேதி, காவிரியில் வினாடிக்கு, 1 லட்சத்து, 33 ஆயிரத்து, 500 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டது. தமிழக எல்லையான, பிலிகுண்டலுவில், தண்ணீர் வரத்து, நேற்று காலை, வினாடிக்கு, 1 லட்சத்து, 5,000 கன அடியாக உயர்ந்தது. அதிக தண்ணீர் வரத்து மற்றும் மேட்டூர் அணை நிரம்பி வருவதன் காரணமாக, ஒகேனக்கல் அருவிகள் தண்ணீரில் மூழ்கியதுடன், இரு மாநில எல்லையில் உள்ள பாறைகளை மூழ்கடித்து சென்றது.


தலைவாழை இலை:

திருச்சியில், காவிரி கரையோரத்தில் வசிக்கும் பெண்கள், குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்து, தலைவாழை இலை விரித்து, அதில், புதுத் தாலி, மஞ்சள் கயிறு, பழங்கள், காதோலை, கருகமணி, காப்பரிசி, பொங்கல் போன்றவற்றை படையலிட்டு, புதுவெள்ளத்தை வரவேற்று, தீபமேற்றி வழிபட்டனர். புதுமணத் தம்பதியர், ஆற்றில் புனித நீராடி, திருமண மாலையை ஆற்றில் விட்டு, தாலி பிரித்துப் போட்டனர். இதையொட்டி, காவிரிக் கரையில் போலீஸ் பாதுகாப்பும், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. திருச்சி, ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் சார்பில், ரங்கநாதரின் தங்கையான காவிரிக்கு, சீர் கொடுக்கும் வைபவம், நேற்று நடந்தது. ரங்கநாதரின் சீராக புதுத் தாலி, மஞ்சள், குங்குமம், சேலை, மாலை, பழங்கள் போன்றவை, யானை மீது கொண்டு வரப்பட்டு, காவிரி அன்னைக்கு தரப்பட்டது. தஞ்சாவூரிலும், ஆடிப்பெருக்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கும்பகோணம் மற்றும் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லாததால், வீட்டிலேயே மக்கள், ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர்.


விவசாயம் பெருக:

திருவாரூர் மாவட்டத்தில், காவிரியில் தண்ணீர் இல்லாததால், தியாகராஜர் கோவில் கமலாலயக் குளம் மற்றும் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், ஆலங்குடி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் உள்ள குளங்களில், மக்கள் நீராடி, சிறப்பு வழிபாடு öŒ#தனர். விவசாயம் பெருக வேண்டி விவசாயிகள், தானியங்களை வைத்து, கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்தாண்டு, கடைமடையான, நாகை மாவட்டத்திற்கு காவிரி தண்ணீர் வந்து சேராததாலும், மழையின்றியும், நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. அதனால், ஆடிப்பெருக்கு விழாவை, கரை புரண்டோடும் நீர் நிலைகளில் கோலாகலமாகக் கொண்டாட முடியாவிட்டாலும், கடைமடை மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களுக்கு, மங்களப் பொருட்களை வைத்து பூஜை செய்தனர். சிலர், நாகை கடல் பகுதியில் பூஜை செய்து, மஞ்சள், காதோலை, கருகமணி, குங்குமம், பலவித பழங்கள் என, மங்களப் பொருட்களை கடல் நீரில் விட்டு, கடவுளை வழிபட்டனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanjaithamilar - QATAR,இந்தியா
04-ஆக-201310:59:05 IST Report Abuse
Thanjaithamilar ரொம்ப ரசித்து எழுதப்பட்ட தலையங்கம். நிபருக்கு நன்றிகள் பல...பல.... உண்மையில் காவிரியில் நீராடிய சந்தோசம்... அதுவும் அந்த "போட்டோ காலரி" உண்மையில் புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றில் "பெற்றெடுத்த தாய்க்கு நன்றிகடன் செய்வதுபோல" நன்றி செலுத்தும் படங்கள் சூப்பர்... பார்த்த எனக்கு எனது முதல் அடிபெருக்கு நிகழ்வு.... சுகமான நினைவுகள்.... நன்றிகள் தினமலருக்கு....
Rate this:
Share this comment
Cancel
Ambalkumar - Nagapattinam,இந்தியா
04-ஆக-201310:29:32 IST Report Abuse
Ambalkumar விவசாயம், விவசாயி, செழிக்க வாழ்த்துவோம்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
04-ஆக-201309:30:33 IST Report Abuse
villupuram jeevithan வெள்ளம் கரை புரண்டு ஓடுவது நமது நெஞ்சங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது என்று சொல்லுவது உண்மையானது தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X