வரதட்சணை கொடுமை சட்டத்தை மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

Added : செப் 05, 2010 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி : "வரதட்சணை சட்டத்தை பயன்படுத்தி பொய்வழக்கு போடுவதைத் தடுக்க, சட்டத் திருத்தம் கொண்டு வருவது பற்றி ஆய்வு செய்ய வேண்டும்' என, மத்திய அரசை சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது.


வரதட்சணை சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய்வழக்கு போடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், ஏராளமான ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மணீஷா என்ற பெண் தனது கணவர் மணீஷ் மீது வரதட்சணை புகார் கொடுத்தார். அதில், "2007ம் ஆண்டு என் பெற்றோர் வீட்டுக்கு வந்த கணவர் மணீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சொகுசு கார் வாங்கித் தர வலியுறுத்தினர். கார் வாங்கித் தர சொல்லி கணவர் கொடுமைப்படுத்துகிறார்' என, தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, மணீஷாவின் புகாரை மணீஷ் குடும்பத்தினர் மறுத்தனர். மணீஷா தன் புகாரில் குறிப்பிட்டுள்ளதைப் போல், 2007ம் ஆண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு நாங்கள் யாரும் செல்லவில்லை. அவர் வேண்டுமென்றே பொய் புகார் அளித்துள்ளார் என, தெரிவித்தனர். மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் உண்மையை கண்டறிய போலீசாருக்கு உத்தரவிட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், மணீஷா பொய்ப் புகார் கொடுத்தது அம்பலமானது.


இதையடுத்து, நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அடங்கிய சுப்ரீம் கோர்ட் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: வரதட்சணை சட்டத்தை தவறாக பயன்படுத்தி கணவன் மீது பொய் வழக்கு போடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், ஏராளமான ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். இது கவலை அளிக்கிறது. வரதட்சணைக் கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வருவது பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.தவிர, இதுபோன்ற பொய்ப் புகார் தருபவர்களை வக்கீல்கள் ஆதரிக்கக் கூடாது. சிறிய குடும்ப பிரச்னைகளுக்கு கூட வரதட்சணை சட்டத்தை தவறாக பயன்படுத்தி, கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul - சவுதிarabia,இந்தியா
06-செப்-201015:25:53 IST Report Abuse
Arul உடனே சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அல்லது பொய் வழக்கு போடும் பெண்ணுக்கும் , சரியாக விசாரிக்காத போலீசுக்கும் உடனே தண்டனை கொடுக்க வேண்டும். பெண்ணை பாதுகாத்தது போதும்.
Rate this:
Share this comment
Cancel
சுரேஷ் - திருச்சி,இந்தியா
05-செப்-201021:10:09 IST Report Abuse
சுரேஷ் Its appreciatable decision from SC. As seen nowadays there are above 80 sections to protect women, but even a single section to MEN. The basic reason behind everything is that MEN are soft minded by default, hence they created/accepted all sections favoruing women for so long years. But women........?
Rate this:
Share this comment
Cancel
kumar - india,இந்தியா
05-செப்-201012:11:42 IST Report Abuse
kumar good judjement, this one only police and lawer only make money,please need to eleminate this law,some more have to punish them, incase they give false fIR
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X