அரசியல் செய்தி

தமிழ்நாடு

தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்

Added : ஆக 09, 2013 | கருத்துகள் (24)
Advertisement
தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்,பட்டியல்,பிரதமர், முதல்வர், ஜெ., கடிதம்,Jayalalitha, Centre,SC, Christian, SC list

சென்னை : "தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின கிறிஸ்தவர்களை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க, நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில், சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:"தாழ்த்தப்பட்டோர் பட்டியலில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின கிறிஸ்தவர்களை சேர்க்க, சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, 1995ல், அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இதே கோரிக்கையை, தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகள், தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தினர்.இது குறித்து ஆய்வு நடத்த, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில், மத்திய அரசு, குழு அமைத்தது. இக்குழு, "குடிமக்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும், ஜாதியை தவிர்க்க முடியாத நிலை உள்ளது. மதம் எதுவாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை, ஒரே மாதிரியாகத் தான் உள்ளது' என்பதை சுட்டிக் காட்டியது.
தாழ்த்தப்பட்டோர் மதம் மாறியதற்காக, சலுகை மறுக்கப்படுவது சரியானதல்ல. இந்நிலையில், தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள், அரசியல் சட்டப்படி, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படாததால், அவர்களால் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளைப் பெற முடியவில்லை.

ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க முடியும் என, அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்து மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஆகியவற்றை சேர்ந்த, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவது, அரசியல் சாசனப்பிரிவு, 341க்கு முற்றிலும் எதிரானது. எனவே, சலுகைகள், தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள், மற்றவர்கள் பெறும் சலுகைகளைப் பெறும் வகையில், சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.தாழ்த்தப்பட்டோருக்கான சட்டம் ஒன்றும் மாற்றக் கூடாதது அல்ல; அது, செதுக்கப்பட்ட சிலையும் அல்ல. தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க, நடப்பு பார்லிமென்ட் தொடரில், சட்டம் இயற்ற வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
10-ஆக-201317:38:40 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi எல்லா சமூகங்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும்.எல்லா சமூகங்களும் கல்வி வேலை வாய்ப்பில் முன்னேறினால் தான் உண்மையான வளர்ச்சியை இந்தியா பெற முடியும்.அந்த உண்மையான வளர்ச்சியை நோக்கி இந்தியாவை கொண்டு செல்ல யாரும் முன்வருவதில்லை.ஒட்டு அரசியல் தான் நடத்துகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Indian - ramnad,இந்தியா
10-ஆக-201317:37:03 IST Report Abuse
Indian போதும் உங்கள் நாடகம்... மாறி மாறி எல்லோரையும் ஏமாற்றுவது.... முதலில் விகிதாசார அடிப்படையில் உங்கள் கட்சியில் MLA களை நிறுத்துங்கள்... கிறிஸ்தவர்கள் 7% (மறைமுகமாக 9%) மற்றும் இஸ்லாமியர்கள் 5.6% தமிழகத்தில் உள்ளனர் ஆனால் சட்டமன்றத்தில் வெறும் 2% கூட இல்லை அவர்களது பங்கு... அவர்களையும் முதலில் தேசிய நீரோட்டத்தில் இணையுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
10-ஆக-201311:02:42 IST Report Abuse
TamilArasan இது மத மற்றதை ஊக்குவிக்கும்... மேலும் தரம் கேட்ட வாக்கு வங்கி அரசியல்...இந்து மக்கள் இது போன்று அரசியல் புரிபவர்களை தங்கள் வாக்கு மூலம் தண்டித்தால்தான் இந்த கேடு கெட்ட சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் அரங்கேறாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X