கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியின் ஏல அறிவிப்பை ரத்து செய்ய கோரிய மனுக்கள் : ஐகோர்ட் கிளை தள்ளுபடி

Added : செப் 05, 2010
Advertisement

மதுரை : மதுரை மாநகராட்சியின் புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை கட்டண வசூல் குறித்த ஏல அறிவிப்பை ரத்து செய்ய கோரிய மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.


மதுரையை சேர்ந்த எஸ்.தங்கப் பாண்டி, சி.எம்.செந்தில்குமார் தாக்கல் செய்த ரிட் மனுக்கள்: ஏற்கனவே மதுரை மீனாட்சிகோயில் அருகே இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டில், வாகன நிறுத்துமிடம் மற்றும் கழிப்பறையில் கட்டணம் வசூலிக்கும் உரிமம் ஏலம் எடுத்தோம். தற்போது சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணி அருகே மாற்றப்பட்டு, செயல்பட துவங்கியது. அங்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் கழிப்பறை கட்டணம் வசூலிக்கும் உரிமம் குறித்து மாநகராட்சி கமிஷனர் கடந்த ஆக., 4ம் தேதி ஏல அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு விண்ணப்பித்தோம். ஆக., 19ம் தேதி ஏலம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.


சொத்து வரி குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என காரணம் கூறி, எங்கள் விண்ணப்பத்தை உதவி கமிஷனர் (வருவாய்) நிராகரித்தார். மாநகராட்சி ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். ஏலத்தில் நாங்கள் கலந்து கொள்ளும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதி எம்.ஜெயபால் முன் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி வக்கீல் சண்முகசுந்தரம், ரவிசங்கர் வாதிடுகையில், ""மனுதாரர்கள் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. மேலும் உதவி கமிஷனர் நிராகரித்தை எதிர்த்து, மாநகராட்சி நிலைக்குழுவிடம் அவர்கள் அப்பீல் செய்ய வேண்டும். நேரடியாக மனு செய்ய கூடாது,'' என்றனர். அதை ஏற்று ரிட் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X