பாதுகாப்பு கேள்விக்குறி: கல்பாக்கத்தில் தொடரும் அசாதாரண சம்பவங்கள்

Updated : ஆக 15, 2013 | Added : ஆக 14, 2013 | கருத்துகள் (12)
Advertisement
கல்பாக்கம்:கல்பாக்கத்தில் நிகழும் அசாதாரண சம்பவங்களால், அணுசக்தி வளாக பாதுகாப்பு, கேள்விக் குறியாக மாறி வருகிறது.கல்பாக்கத்தில், அணுசக்தித் துறையின்கீழ், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் (இதன் கட்டுப்பாட்டில், கல்பாக்கம் அணு மறுசுழற்சி, புளூட்டோனியம் மறுசுழற்சி ஆகிய மையங்கள் உள்ளன), இந்திய அணுமின் கழகம் சார்பில், சென்னை அணுமின் நிலையம்
பாதுகாப்பு,  கல்பாக்கம், Protection,Kalpauk, atomic, power station

கல்பாக்கம்:கல்பாக்கத்தில் நிகழும் அசாதாரண சம்பவங்களால், அணுசக்தி வளாக பாதுகாப்பு, கேள்விக் குறியாக மாறி வருகிறது.

கல்பாக்கத்தில், அணுசக்தித் துறையின்கீழ், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் (இதன் கட்டுப்பாட்டில், கல்பாக்கம் அணு மறுசுழற்சி, புளூட்டோனியம் மறுசுழற்சி ஆகிய மையங்கள் உள்ளன), இந்திய அணுமின் கழகம் சார்பில், சென்னை அணுமின் நிலையம் மற்றும் பாரதிய வித்யுத் நிகாம் நிறுவனம் (பாவினி) சார்பில், 500 மெகா வாட் மின்திறன், முன்மாதிரி அதிவேக ஈனுலை அணுமின் திட்டம், பிற சார்பு நிறுவனங்கள் ஆகியவை, இயங்கி வருகின்றன.இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், பொறியாளர்கள், பிற ஊழியர்கள் ஆகியோர் வசிக்க, கல்பாக்கம் மற்றும் அணுபுரம் ஆகிய நகரியங்கள் உள்ளன. இப்பகுதிகளில் நிகழும், அசாதாரண சம்பவங்கள், இப்பகுதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளன. இங்கு அணுசக்தி வளாகத்திற்கு தெற்கில், 2 கி.மீ., தொலைவில், கல்பாக்கம் நகரியம், மேற்கில், 5 கி.மீ., தொலைவில், அணுபுரம் நகரியம் என, அமைந்துள்ளன.அணுசக்தி வளாக பகுதி பாதுகாப்பிற்கு, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், துவக்க காலத்திலிருந்தே, பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது, பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, ராணுவ பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. நவீன ராடார், கேமரா என, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வளாக நுழைவாயில் மற்றும் அணுசக்தி நிறுவன பகுதிகளில், அரசு மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என, பல தரப்பினரையும், சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள், சோதனை செய்தும், அடையாள அட்டையை பரிசோதித்தும், வளாகத்திற்குள் அனுமதிக்கின்றனர். உயர்மட்ட அலுவலர்களை தவிர்த்து, பிற நபர்கள் அலைபேசி, கேமரா, பிற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை.தற்போது, சோதனை மற்றும் கண்காணிப்பு குளறுபடிகளால், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பாவினி அணுமின் பகுதியில், தனியார் நிறுவன மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த, ஷபீர் என்பவர், அணுமின் திட்ட பகுதியில் எடுத்த, 400க்கும் மேற்பட்ட படங்களை, "பென்டிரைவில்' பதிவு செய்து, எடுத்துச் செல்ல முயன்று, பிடிபட்டார்.அவரிடம் பறிமுதல் செய்த, "பென்டிரைவை' முதலில் பரிசோதிக்காத வீரர்கள், நான்கு நாட்கள் கடந்து, தன்னிடம் ஒப்படைக்க, அவர் வற்புறுத்திய பிறகே, சந்தேகத்தில் பரிசோதித்து, அணுமின் திட்ட பகுதி படங்கள் இருந்ததை கண்டு, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது ஒருபுறமிருக்க, செய்தியாளர்கள் போர்வையில் வருபவர்களையும், முறையாக சோதிக்காமல் அனுமதிக்கின்றனர்.

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், எப்போதாவது மட்டுமே, செய்தியாளர்களை அழைப்பர். பத்திரிகை நிறுவன அடையாள அட்டையை பரிசோதித்த பிறகே, அவர்களை அனுமதிப்பர். சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் ஆகியவற்றில், பலமுறை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் நிலையில், பத்திரிகையாளர்களை, முறையாக சோதிக்க அக்கறை கொள்வதில்லை.இதையடுத்து, பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தொடர்பில்லாதவர்களும், பத்திரிகை நண்பர்களுடன் வளாகத்தில் செல்கின்றனர்; பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்கின்றனர்; படம் எடுக்கின்றனர். அவற்றை தவறாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளது.

அடுத்து, பாதுகாப்பிற்குட்பட்ட நகரிய பகுதி வீட்டில், காதல்ஜோடி ரகசியமாக தங்கி, காதலி இறந்த சம்பவமும், சமீபத்தில் நடந்தது. இப்பகுதியில், தனியாக செல்லும் பெண்களிடம், வழிப்பறி, வீடுகளுக்கு அருகில் நிறுத்தியுள்ள வாகனங்கள் திருட்டு என, அடிக்கடி அரங்கேறுகின்றன. உச்சக்கட்ட கண்காணிப்பும், சோதனையும் உள்ள அணுசக்தி வளாகம் மற்றும் நகரியத்தில், பாதுகாப்பற்ற அவலம் ஏற்பட்டுள்ளது.கல்பாக்கம் சுற்றுப்புற பகுதியினர், இப்பகுதி பாதுகாப்பில், முற்றிலும் அக்கறையின்றி, அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர். மாநில அரசின் பேருந்து நிலையம் மற்றும் பணிமனை, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை, நகரியத்தில் இயங்குகின்றன. இதையடுத்து, ஏராளமானோர் நகரியம் வருவதால், பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.

இத்தகைய அசாதாரண, அசம்பாவித சம்பவங்களால், கல்பாக்கத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:பொதுமக்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோரின் போராட்டங்கள், இப்பகுதி பாதுகாப்பை பலவீனப்படுத்துவதாகவும் உள்ளதால், அதை தவிர்க்கவேண்டும். நகரியத்தில் உள்ள பேருந்து நிலையம், பள்ளி ஆகியவற்றை, புதுப்பட்டினத்திற்கு மாற்ற வேண்டும். அப்பகுதிக்கென, புதிய வங்கிகளும் துவக்க வேண்டும். இங்கு வெளிநபர் வருவது தடைபடும். வெளிநபரை, அவசியம் கருதி, சோதித்து அனுமதிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A. Sivakumar. - Chennai,இந்தியா
14-ஆக-201311:30:45 IST Report Abuse
A. Sivakumar. இந்த நிலைமை கூடங்குளத்துக்கும் கட்டாயம் ஒரு நாள் வரும். அணுவிபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படுவது இணையத்தில் செய்தி வாசிக்கும் நாம் அல்ல, அந்த சுற்றுப்புறத்தில் வசிக்கும் சாதாரண மக்கள்தான், அதனால்தான் போராடுகிறார்கள்... இந்த சாதாரண உண்மையைக் கூடப் புரிந்துகொள்ளாமல், அவர்களுடைய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி மகிழ்கிறோம் நாம்...
Rate this:
Cancel
siva - Chennai,இந்தியா
14-ஆக-201310:11:50 IST Report Abuse
siva சாகப்போவது தமிழன் தானே, அதனால் நமெக்கென்ன கவலை நாம் இந்தியர்கள் அல்லவா ?
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஆக-201309:12:24 IST Report Abuse
Srinivasan Kannaiya அணு ஏற்படுத்தும் விளைவுகளை இரண்டு கால் மனிதன் ஏற்படுத்தும் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்..நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் இருக்கும்.. எனவே பாதுகாப்பு அதிகபடுத்த்வேண்டியது கடமை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X