பராமரிப்பில்லாத சலவைத்துறைத் தொட்டிகள்

Added : ஆக 14, 2013 | |
Advertisement
உடுமலை : உடுமலை கோமதிநகரில், சலவைத்தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட சலவைத்துறையில் உள்ள தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளது. இதனை புனரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், வசிக்கும் சலவைத்தொழிலாளர்களுக்காக கடந்த 1996ம் ஆண்டு சலவைத்துறை கோமதிநகரில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிட்டில்

உடுமலை : உடுமலை கோமதிநகரில், சலவைத்தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட சலவைத்
துறையில் உள்ள தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளது. இதனை புனரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், வசிக்கும் சலவைத்தொழிலாளர்களுக்காக கடந்த 1996ம் ஆண்டு சலவைத்துறை கோமதிநகரில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிட்டில் அமைக்கப்பட்டது. தண்ணீர் இணைப்புடன் பத்துதொட்டிகளும், துணி துவைக்க கற்களும் அமைக்கப்பட்டிருந்தன.
தொழிலாளர்களுக்காக கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்பட்டது. அடிப்படை வசதியுடன் அமைந்துள்ள இந்த சலவைத்துறையினை சலவைத்தொழிலாளர்களும் ஆர்வமுடன் பயன்படுத்தி வந்தனர். இங்கு துணிகளை துவைத்து சலவை செய்யும் பணிகளை தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.
காலப்போக்கில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், இந்த இடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் போதிய பராமரிப்பின்றி உடைந்துள்ளன. தொழிலாளர்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட கழிப்பிடமும்
வீணாகி கிடக்கிறது.
சில சமூக விரோதிகள் இந்த இடத்தை மதுபானம் குடிக்கும் பகுதியாகவும் மாற்றி வருகின்றனர். மதுபானங்களை குடித்து பாட்டில்களை தொட்டிகளில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இது போன்ற சம்பவங்களால், இந்த துறையை தொடர்ந்து பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சலவைத்துறை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X